Interim budget announced that mini tidal parks will be set up in Thanjavur, Vellore, and Cuddalore : தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் பார்ப்போம் :
* தூய்மைப் பணியாளர்களுக்கு மேலும் 30 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும்
* தமிழகத்தில் உள்ள 1,048 கோயில்களுக்கு சொந்தமான ரூ.8,363 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்பு
* தமிழகத்தில் ரூ.8,100 கோடி செலவில் திருக்கோயில்களுக்கு திருப்பணிகள்
* சுற்றுலா துறையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம்
* சுற்றுலாத் துறைக்கு ரூ.1,394 கோடி ஒதுக்கீடு
* நதிக்கரை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.374 கோடி
* பழங்குடியினர் வீடுகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ரூ.755 கோடி ஒதுக்கீடு
புதிய டைடல் (TIDEL) பூங்காக்கள்
தொழில்நுட்ப வளர்ச்சியை மாநிலம் முழுவதும் பரவலாக்க மதுரை, திருச்சி, சேலம், தூத்துக்குடி ஆகிய நகரங்களில் புதிய டைடல் (TIDEL) பூங்காக்கள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனுடன் தஞ்சாவூர், வேலூர், கடலூர் போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் 'மினி டைடல் பூங்காக்கள்' அமைப்பதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலன்
மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு ரூ. 1,471 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் மாதாந்திர பராமரிப்புத் தொகை ரூ. 1,500 லிருந்து ரூ. 2,000 ஆக உயர்த்தப்பட்டதன் மூலம் 8.52 லட்சம் பேர் பயன்பெறுகின்றனர்.
மேலும் படிக்க - மகளிர் விடியல் பயணம், உரிமைத் தொகை : பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்
ஓய்வூதியத் திட்டங்கள்
முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ. 5,463 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய சிப்காட் வளாகங்கள்
இது தவிர தொழில் மற்றும் உள்கட்டமைப்புத் துறையில், ஒசூர், திண்டிவனம் உட்பட 12 இடங்களில் புதிய சிப்காட் வளாகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
மேலும் படிக்க - இடைக்கால பட்ஜெட் 2026 : கனவு இல்லம் கூடுதலாக 1 லட்சம் வீடுகள்
==============