PMK Leader Anbumani in Independence Day 2025 Grama Sabha Meet 
தமிழ்நாடு

Anbumani: கிராமசபை கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம்...

Anbumani on Caste Wise Census : விடுதலை நாளன்று நடத்தப்படும் கிராமசபைக் கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

Kannan

சுதந்தின தினத்தன்று, கிராம சபை கூட்டங்கள் :

Anbumani on Caste Wise Census : சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி நாடு(Independence Day 2025) முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைக்க, மாநில தலைநகரங்களில் முதலமைச்சர்கள் மூவண்ண கொடியை ஏற்றி வைப்பார்கள். அன்றைய தினம் தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டங்களை நடத்த உத்தர விடப்பட்டு உள்ளது.

கிராம சபை கூட்டங்கள், காந்தியின் கனவு :

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி(Anbumani) வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் நாள் காலை 11.00 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும்(Grama Sabha Kootam 2025) என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராமங்கள் அனைத்தும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளாகத் திகழ வேண்டும் என்ற மகாத்மா காந்தியடிகளின் கனவை நனவாக்குவதற்கான மகத்தான ஆயுதம் தான் கிராம சபைக் கூட்டங்கள் ஆகும்.

ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள் :

நமது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக அவற்றை நாம் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான அற்புதமான வாய்ப்பு கிராம சபைக் கூட்டங்கள் தான்.

மேலும் படிக்க : தந்தையை மிஞ்சிய தனயனாக இருக்க கூடாது : அன்புமணிக்கு அட்வைஸ்

சாதிவாரி கணக்கெடுத்து தீர்மானம் :

இந்த ஆண்டு கிராமசபைக் கூட்டங்களில், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு(Castewise Census in Tamil Nadu) நடத்தப்பட வேண்டும்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாமகவினர் உள்ளிட்ட பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று 75 ஆண்டுகளாக முழங்கி வரும் திமுகவுக்கு உண்மையாகவே ஜனநாயகத்தில் அக்கறை இருந்தால், கிராம சபைகளுக்கு உள்ள உரிமைகளை மதித்தும், அவற்றுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையைக் கொடுக்கும் வகையிலும் கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அங்கீகரித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

===========