
79வது சுதந்திர தின விழா :
PM Modi invites Ideas for 79th Independence Day 2025 : இந்தியாவின் 79-வது ஆண்டு சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவண்ண கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்காக உரையாற்றுவார். பிரதமரின் உரையின் மக்களுக்கு பயனளிக்கும் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும்.
மக்கள் யோசனை, மோடி அழைப்பு :
இந்தநிலையில் சுதந்திர தின விழா(Independence Day Speech) உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் பற்றி, நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கருத்து கேட்டுள்ளார். இதுபற்றி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ” சுதந்திர தின விழா வருவதை ஒட்டி, உங்களின் கருத்துகளை அறிய ஆவலாக இருக்கிறேன்.
மக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் :
சுதந்திர தின உரையில் என்ன கருப்பொருட்கள் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் யோசனை கூறுங்கள். உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். உங்கள கருத்துக்களை நமோ செயலி அல்லது MyGov தளங்களில் பகிருங்கள்” இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) பதிவிட்டு இருக்கிறார்.
மக்கள் தெரிவிக்கும் யோசனைகள் பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் ஏற்கத்த அம்சங்கள், பிரதமரின் சுதந்திர தின உரையில் இடம்பெறும்.
மேலும் படிக்க : 20வது பிரதமர் கிசான் நிதி : விவசாயிகளுக்கு விடுவிக்கிறார் மோடி
11வது முறையாக சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்ற இருக்கிறார்.