தந்தை- மகன், உச்சக்கட்ட மோதல் :
PMK Leader Ramadoss Speech : ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், தலைவர் பதவிக்காக இருவரும் தேர்தல் ஆணையம் வரை சென்று விட்டனர். இதனால், பாமக இரண்டாக உடையும் சூழல் உருவாகி இருக்கிறது.
நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், தனது பெயரை இன்ஷியலாக மட்டுமே பயன்படுத்த வேண்டும், அன்புமணிக்கு(Anbumani Ramadoss) பின்னால் தனது பெயரை போடக் கூடாது என்று சூட்டை கிளப்பி விட்டார்.
ஒட்டு கேட்கும் கருவி :
இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்(Ramadoss Press Meet), அன்புமணி பெயரை குறிப்பிடாமல், தனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி(Hidden Listening Device) ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாக பகீர் குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார். லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒட்டு கேட்கும் கருவி எனது வீட்டில் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் தான் கண்டுபிடித்தோம், என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க : தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ், அன்புமணி : மாம்பழச் சின்னம் முடங்குமா?
நாற்காலி பக்கத்தில் ஒட்டு கேட்கும் கருவி :
நான் உட்காரும் இடத்தில், எனது நாற்காலியின் பக்கத்தில் ஒட்டு கேட்கும் கருவி இருக்கிறது. யார் வைத்தார்கள், எதற்காக வைத்தார்கள் என்பது பற்றி ஆராய்ச்சி பண்ணி கொண்டு இருக்கிறோம். அந்தக் கருவி வெளிநாட்டு கருவி. எனவே, சாதாரண விலையுள்ள கருவி அது கிடையாது. அதிகமான விலை உள்ள ஒரு கருவி, இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.
பாமகவில் ஏற்கனவே தந்தை - மகன் மோதல்(Ramadoss vs Anbumani Ramadoss Fight) போக்கு நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சோர்வடைய செய்து வரும் நிலையில், நாள்தோறும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அவர்களை விரக்தியின் எல்லைக்கே கொண்டு சென்றிருக்கிறது.
=====