மகளிர் விடியல் பயணம், உரிமைத் தொகை : பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்தற்போது வழங்கப்பட்ட உரிமைத்தொகை
Summer Special Amount 2000 : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகையாக மாதம் ஆயிரம் ரூபாயை திமுக அரசு வழங்கி வருகிறது,
தேர்தலை முன்னிட்டு அடுத்த 3 மாதத்துக்கு சேர்த்து 3 ஆயிரம் ரூபாய், கோடைகால சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் என 5 ஆயிரம் ரூபாய், உரிமைத்தொகை பெறும் பயனாளிகள் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கருத்து
இது குறித்து அவர் பேசியதாவது , 2026 தேரதல் உஷ்ணம் அதிகரித்துவிட்டதால் கோடைகாலத்துக்கு 2 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளீர்கள்.
இரவோடு இரவாக தொகை வரவு வைப்பது தேர்தல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் பேசுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலம் வருகிறது.
தேர்தலை மையமாக வைத்து வழங்கி உள்ளீர்கள். மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை யாரும் எதிர்க்க மாட்டார்கள். பிறகு முன்கூட்டியே ஏன் கொடுத்தீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் படிக்க : "மகளிர் உதவித் தொகை" : அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த TVK விஜய்
பதிலளித்த அமைச்சர் வேலு
கோடை காலம் வருகிறது. மக்களுக்கு மருத்துவ செலவு வரலாம் என்பதால் 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டது,' என்று கூறினார்.
அமைச்சர் கீதா ஜீவன்
கருணாநிதி ஆட்சியில் இலவச டிவி வழங்கிய போதும் அதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. இனி எல்லா ஆண்டும் கோடை காலத்தில் மகளிருக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
பாஜகவை சேர்ந்தவர் மகளிர் உரிமைத்தொகைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். சூழ்ச்சியை முறியடித்துள்ளோம். இனி எல்லா கோடைகாலமும் மகளிருக்கு 2 ஆயிரம் தரப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க : மகளிர் விடியல் பயணம், உரிமைத் தொகை : பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள்