TVK Vijay 2nd Madurai Manadu Date Update 
தமிழ்நாடு

TVK 2nd Manadu : மதுரை தவெக மாநாட்டு தேதி : ஆகஸ்டு 21க்கு மாற்றம்

TVK Vijay 2nd Madurai Manadu Date Update : மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு ஆகஸ்டு 21ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Kannan

தமிழக வெற்றிக் கழகம் :

TVK Vijay 2nd Madurai Manadu Date Update : நடிகராக இருக்கும் விஜய் அரசியலில் களம் புகுந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார். மத்தியில் பாஜக, மாநிலத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் அவர், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதில் இப்போதைக்கு உறுதியாக இருக்கிறார். விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என்று, தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக உள்ளது. பாஜகவை கைவிட்டு அதிமுக தனித்து வந்தால், கணக்குகள் மாறலாம். ஏனெனில் விஜய் பிரிக்க போகும் வாக்குகள் யாருக்கு சாதகம் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

மதுரையில் 2வது மாநில மாநாடு :

கடந்த ஆண்டு விழுப்புரத்தில் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்திய விஜய், மாஸ் கூட்டத்தை காட்டி தமிழக கட்சிகளை மிரள வைத்தார். இதைத்தொடர்ந்து, பொதுக்குழு, செயற்குழு என தமிழக வெற்றிக் கழகம் படிப்படியாக அரசியல் களத்தில் வேகமெடுக்க தொடங்கி இருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு 8 மாதங்களே இருப்பதால், மாநில மாநாடு, தமிழக சுற்றுப் பயணம், மக்கள் சந்திப்பு என திட்டங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார் விஜய். அதன்படி, ஆகஸ்டு 25ம் தேதி மதுரையில் 2வது மாநில மாநாடு(TVK Madurai Manadu Date) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

27ம் தேதி விநாயகர் சதுர்த்தி :

மாநாட்டிற்கு ஒருநாள் கழித்து அதாவது 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி(Vinayagar Chaturthi 2025 Date) வருகிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதோடு, அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதை காவல்துறை சுட்டிக் காட்டியது. எனவே, 25ம் தேதிக்கு பதிலாக வேறு தேதியில் மாநாட்டை நடத்திக் கொள்ள முடியுமா எனவும் காவல்துறை கேட்டது. இதையடுத்து மாநாட்டு தேதியை மாற்ற தமிழக வெற்றிக் கழகம் முடிவு(TVK 2nd Manadu Date Change) செய்தது.

தவெக மாநாடு, விஜய் அறிக்கை :

இதுகுறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு, வரும் 25ம் தேதி மதுரையில் நடக்கும் என, ஏற்கனவே அறிவித்திருந்தேன். மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில், விநாயகர் சதுர்த்தி விழா வருவதால், காவல் துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு, அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டி உள்ளது.

ஆகஸ்டு 21ம் தேதி மாநாடு :

எனவே, மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக, வரும் 18 முதல் 22ம் தேதி வரை, ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படி, காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, கட்சியின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது. வரும் 21ம் தேதி மாலை 4:00 மணிக்கு(TVK 2nd Manadu New Date & Time), ஏற்கனவே அறிவித்த அதே மதுரை மாநகரில், அதே பிரமாண்டத்தோடும், கூடுதல் உற்சாகத்தோடும் மாநாடு மிகச் சிறப்பாக நடத்தப்பட உள்ளது.

மேலும் படிக்க : TVK Vijay: ”மதுரை தவெக மாநாடு”: 10 லட்சம் பேர் அமர பிரமாண்ட பந்தல்

மாநாட்டு பணிகள் மும்முரம் :

இதற்கான பணிகள், ஏற்கனவே சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. தற்போது, பணிகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, கட்சி நிர்வாகிகள், 21ம் தேதி மதுரையில்(TVK Vijay 2nd Madurai Manadu) நடக்கவுள்ள மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும், பாதுகாப்புடனும் வந்து கலந்து கொள்ள வேண்டும்” இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.

=====