Nobel Peace Prize 2025 Winner Venezuela’s Maria Corina Machado Donald Trump Disappointed 
உலகம்

தகர்ந்த டிரம்ப் கனவு! அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா பெண்ணுக்கு..

Nobel Peace Prize 2025 Winner Maria Corina Machado: நோபல் பரிசுக்கான காலம் தொடங்கியுள்ள நிலையில், மருத்துவம், இயற்பியல், வேதியல் என தொடர்ந்து, 6 பிரிவுகளில் அமைதிக்கான நோபல் பரிசு இன்று வழங்கப்பட்டது.

Bala Murugan

நோபல் பரிசுகள் :

Nobel Peace Prize 2025 Winner Maria Corina Machado : ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நோபல் பரிசு காலம் என்பது, அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இந்தாண்டு மருத்துவம், இயற்பியல், வேதியல், இலக்கியம் என தொடர்ந்து நோபல் பரிசு பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டது

டிரம்ப் நோபல் ?

ஆண்டுதோறும் அமைதிக்கான நோபல் பரிசு மேல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்குமாறு அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் அறிவுறுத்தி வந்ததின் பேரில், அதன் எதிர்பார்ப்பு இன்னும் மேலோங்கியது. அமைதி நோபல் பரிசு வாங்கும் நாளை நோக்கி நகர்ந்து சென்றது. தான் 8 போர்களை நிறுத்தியதாகவும், தனக்கு வழங்கவேண்டும் எனவும் அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு தரவில்லை என்றால், அது அமெரிக்கர்களுக்கு அவமானம் என்று எல்லாம் சொல்லி கொண்டு வந்தார் டோனால்ட் டிரம்ப்.

தகர்ந்த கனவு

1901ஆம் ஆண்டு முதல் அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்டு வருகிறது. சுவீடனை சேர்ந்த ஆல்பிரட் நோபலின் (Alfred Nobel) என்ற ஆய்வாளரின் நினைவாக ஆண்டுதோறும் இந்த அமைதிக்கான நோபல் பரிசு விருது வழங்கப்படு்கிறது.

ஒபாமாவை விளாசிய டோனால்ட் டிரம்ப் :

இந்நிலையில், 2025 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு குறித்து தொடர்ந்து பேசி வந்த டோனால்ட் டிரம்ப், தனக்கு அந்த பட்டம் தேவை இல்லை எனவும், முன்னாள் அதிபராக இருந்த ஒபாமாவிற்கு நோபல் பரிசு(Barack Obama Nobel Prize) கொடுத்தது லாஜிக்கே இல்லை எனவும், ஒபாமா எதையும் செய்யாமலேயே அதைப் பெற்றார். எதற்காக அந்த விருதைப் பெற்றோம் என்பது ஒபாமாவுக்கே தெரியாது. நமது நாட்டை அழிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யாத ஒபாமாவுக்கு அவர்கள் அதைக் கொடுத்தார்கள் என்று விமர்சித்தார்.

வெனிசுலா மச்சாடோவுவிற்கு நோபல் :

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சோடோவுக்கு(Venezuela Maria Corina Machado Nobel Peace Prize) அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்று நோபல் பரிசு கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோனால்ட் டிரம்ப் வேதனை :

வெள்ளை மாளிகை டோனால்ட் டிரம்பின் படத்தை பகிர்ந்து அமைதியின் அதிபர் என அவரை பாராட்டிய நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா மரியா கொரினாவிற்கு கிடைத்ததை அடுத்து டிரம்பின் அமைதி குலைந்து, ஏமாற்றம் கிடைத்துள்ளது.

========