Donald Trump on Russia Ukraine War https://x.com/WhiteHouse?
உலகம்

’முத்தரப்பு பேச்சுவார்த்தை’ : அதிபர் டிரம்ப் அடுத்தக்கட்ட முயற்சி

Donald Trump on Russia Ukraine War : உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

Kannan

உக்ரைன் - ரஷ்யா போர் :

Donald Trump on Russia Ukraine War : ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளாக நடந்து வரும் போர், முக்கிய கட்டத்தை நோக்கி நகர்ந்து இருக்கிறது. இதுவரை ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதினை நேரில் அழைத்து பேசினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.

டிரம்ப் - ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை :

அலாஸ்காவில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் போர் தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அழைப்பு விடுத்தார் டிரம்ப். அவரும் அதையேற்று, அமெரிக்கா சென்று டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ளைமாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையேயான சந்திப்பு நேற்றிரவு நடந்தது.

மேலும் படிக்க : ஆக்கப்பூர்வ பேச்சு: ஆனால்? உக்ரைன் போர்!

ஐரோப்பிய தலைவர்கள் பங்கேற்பு :

இதில், ஜெலன்ஸ்கியுடன் ஐரோப்பிய நாடுகளின் முக்கிய தலைவர்கள், அதிபர்கள் ஆகியோர் பங்கேற்றனர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஜெர்மனி அதிபர் மெர்ஸ், இத்தாலி அதிபர் மெலோனி, பின்லாந்து அதிபர் ஸ்டுப், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா லியேன் மற்றும் நேட்டோ(NATO) பொதுச் செயலாளர் மார்க் ருட்டி ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்த சந்திப்பு வெள்ளை மாளிகையின் மிக முக்கியமான நாள் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

அமெரிக்காவுக்கு ஜெலன்ஸ்கி நிபந்தனை :

பேச்சுவார்த்தை பிறகு ஜெலன்ஸ்கி வெளியிட்ட பதிவில், ‘‘போரை விரைந்து முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறோம். ஆனால் அந்த அமைதி நிலையானதாக இருக்க வேண்டும். முக்கியமாக உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்கள் அளிப்பதில் ஐரோப்பாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா ஒப்புக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

முத்தரப்பு பேச்சுவார்த்தை :

ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பு பிறகு, ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசியில் அழைத்து பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், பேச்சுவார்த்தை விவரங்களை எடுத்துரைத்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான பணிகளை தொடங்கியுள்ளேன். அந்த சந்திப்பு முடிந்தவுடன் அவர்களுடன் நானும் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவேன் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க : ’சில விஷயங்கள் மாறாது’ : NATO-வை மறக்க உக்ரைனுக்கு டிரம்ப் அறிவுரை

புதின், ஜெலன்ஸ்கியுடன் இணைந்து டொனால்ட் டிரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தை உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் என்ற நம்பிக்கையை விதைத்து இருக்கிறது.

====