
ரஷ்யா - உக்ரைன் சண்டை :
Donald Trump on Ukraine in NATO : மூன்று ஆண்டுகளாக நீடிக்கும் ரஷ்யா - உக்ரைன் முடிவுக்கு வருவதாக இல்லை. இருதரப்பிலும் பேரிழப்பு ஏற்பட்டாலும், பிடிவாதம் போரை தொடர்ந்து வழி நடத்துகிறது. ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட போர் நிறுத்த முயற்சிகளும் எந்த பலனும் தரவில்லை.
டொனால்டு டிரம்ப் தீவிர முயற்சி :
ரஷ்யா - உக்ரைன் சண்டையை(Russia Ukraine War) நிறுத்தி விட்டு, நோபல் பரிசை பெற ஆசைப்படும், அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்(Donald Trump), அதற்கான முயற்சிகளில் தீவிரமாக உள்ளார். இதற்காக அதிபர் புதினுக்கு பகிரங்க எச்சரிக்கையும் விடுத்து பார்த்த அவர், ஒரு வழியாக அவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.
டோனால்ட் டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தை :
இதை புதின் ஏற்றதால், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருதரப்பு நல்லுறவு, சர்வதேச விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், உக்ரைன் விவகாரம் அப்படியே நின்று விட்டது.
ஜெலன்ஸ்கியை கைகாட்டும் டிரம்ப் :
போர் நிறுத்த அறிவிப்பு வந்துவிடும் என்று உலகமே எதிர்பார்த்த நிலையில், ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், போரை முடிக்கும் யுக்தி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையில் இருப்பதாகவும், டோனால்ட் டிரம்ப் அறிவித்தார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றிருக்கிறார். வெள்ளி மாளிகையில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.
உக்ரைனுக்கு டோனால்ட் டிரம்ப் அறிவுரை :
இந்தச்சூழலில் யாரும் எதிர்பாராத வகையில், உக்ரைனுக்கு அறிவுறுத்தல் ஒன்றை டோனால்ட் டிரம்ப் வழங்கி உள்ளார்.அது என்னவென்றால், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணையக்கூடாது என்பதுதான். ரஷ்யா தங்களை ஆக்கிரமிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சியே, 2022ல் நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்தது. இதற்கு ரஷ்ய அதிபர் புதின் எதிர்ப்பு தெரிவிக்க இருநாடுகள் இடையே போர் மூண்டது,
சில விஷயங்கள் மாறவே மாறாது :
தனது சமூக வலைதளத்தில் அதிபர் டோனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, “உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி விரும்பினால் ரஷ்யாவுடனான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர முடியும். இல்லையென்றால் அவர் தொடர்ந்து போராடலாம். அது எப்படி தொடங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நேட்டோ அமைப்பில் உக்ரைனை இணைக்க கூடாது. சில விஷயங்கள் ஒருபோதும் மாறாது” இவ்வாறு டிரம்ப் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் படிக்க : Russia Ukraine War : ஆக்கப்பூர்வ பேச்சு: ஆனால்? உக்ரைன் போர்!
அதிபர் புதின் உடனான சந்திப்பிற்கு பிறகு, டிரம்பின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதை இது உணர்த்துவதாக தெரிவிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
====