USA-ல் இருந்து 22 லட்சம் டன் LPG இறக்குமதி : வரலாற்று ஒப்பந்தம்

India US Trade Deal : அமெரிக்காவிடம் இருந்து 22 லட்சம் டன் இயற்கை எரிவாயுவை வாங்கும் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து இட்டிருக்கிறது.
India has signed a historic deal to buy 2.2 million tonnes of natural gas from the United States
India has signed a historic deal to buy 2.2 million tonnes of natural gas from the United Stateshttps://x.com/HardeepSPuri
1 min read

இந்தியாவில் எல்பிஜி சந்தை

India US Trade Deal Latest Update in Tamil : இது தொடர்பாக பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் நிகழ்வு இது!. உலகின் மிகப் பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் எல்பிஜி சந்தைகளில் ஒன்றான இந்தியா, அமெரிக்காவிடம் இருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்ய உள்ளது.

மலிவு விலையில் எல்பிஜி

இந்திய மக்களுக்கு பாதுகாப்பான, மலிவு விலையில் எல்பிஜி வழங்குவதற்காக மத்திய அரசு எல்பிஜி ஆதாரங்களை பன்முகப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவிடம் இருந்து 2026- ஆண்டு 22 லட்சம் டன் எல்பிஜி-யை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள்

இந்திய பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் கெமிக்கல் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கெமிக்கல் நிறுவனம் ஆகியவை இதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இந்த எல்பிஜி, அமெரிக்க கல்ஃப் கடற்கரை பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்படும். இந்தியாவின் ஆண்டு தேவையில் இது சுமார் 10% ஆகும்.

பேச்சுவார்த்தையில் முக்கிய உடன்பாடு

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சில மாதங்களாக அமெரிக்காவின் மிகப் பெரிய உற்பத்தியாளர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மத்திய அரசு குறைந்த விலைக்கு எல்பிஜியை நாட்டு மக்களுக்கு வழங்கி வருகிறது.

உஜ்வாலா திட்டம்

கடந்த ஆண்டு விலைகள் 60%க்கும் அதிகமாக உயர்ந்த போதிலும், உஜ்வாலா திட்டத்தின்(Pradhan Mantri Ujjwala Yojana) கீழ் பயன்பெறும் நுகர்வோர்களுக்கு ரூ.500 - 550 விலையிலேயே எல்பிஜி வழங்கப்படுவதை பிரதமர் மோடி உறுதி செய்தார்.

இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1100க்கும் அதிகம். இருந்தாலும், குறைந்த விலையில் அரசு வழங்கி வருகிறது. இதன்மூலம், கடந்த ஆண்டு ரூ. 40,000 கோடிக்கு மேல் செலவை மத்திய அரசு ஏற்றது. 22 லட்சம் டன் வாங்குவதன் மூலம், இந்தியாவின் எல்பிஜி விநியோகத்தில் பெரிய மாற்றங்கள் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு டிரம்ப் நெருக்கடி

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எரிவாயுவை கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இதற்காக, இந்தியாவுக்கு கூடுதல் இறக்குமதி வரிகளை விதித்தார். இந்நிலையில், அமெரிக்காவிடம் இருந்து எல்பிஜி வாங்க இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in