
எம்மி விருதுகள் வழங்கும் விழா :
Adolescence Actor Owen Cooper Winner Of Emmy Awards 2025 : தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கான 'எம்மி' விருது வழங்கும் விழா(77th Emmy Awards), அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. திரைப்படங்களுக்கான அகாதமி விருது மற்றும் இசைக்கான கிராமி விருதுக்கு இணையாக இது கருதப்படுகிறது. இந்த விழாவில் சிறந்த முன்னணி நடிகர், முன்னணி நடிகை மற்றும் துணை நடிகைக்கான விருதுகளை 'ஹேக்ஸ்' என்ற காமெடி தொடர் தட்டிச் சென்றது.
நடிகர் சேத் ரோஜென், நடிகை ஜீன் ஸ்மார்ட் :
சேத் ரோஜென் சிறந்த முன்னணி நடிகருக்கான விருதையும், ஜீன் ஸ்மார்ட் சிறந்த முன்னணி நடிகைக்கான விருதையும் வென்றனர்(Emmy Awards 2025 Winner). ஹன்னா ஐன்பிண்டர் சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார். முதல் முறையாக எம்மி விருது வென்ற ஹன்னா ஐன்பிண்டர், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் இருந்து பாலஸ்தீனத்தை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
'அடோல்சென்ஸ்' தொடருக்கு 6 விருதுகள் :
இங்கிலாந்தின் 'அடோல்சென்ஸ்' ( 'Adolescence' ) தொடருக்கு சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உட்பட 6 பிரிவுகளில் எம்மி விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : இரண்டாவது முறையாக கிடைத்த ஆசிர்வாதம் : ஜி. வி. பிரகாஷ் குமார்
15 வயதில் எம்மி விருது :
( 'Adolescence' ) தொடரில் நடித்த இங்கிலாந்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஓவன் கூப்பர் ( Owen Cooper ) சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். இதன்மூலம், எம்மி விருதை மிக இளைய வயதில் பெற்ற நடிகர் என்ற பெருமையை ஓவன் கூப்பர் தனதாக்கி கொண்டார்.
=====