Coolie: வசூலில் அசத்தும் ரஜினியின் கூலி : 2 நாட்களில் ரூ.250 கோடி!

Coolie Movie 2nd Day Box Office Collection : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் இரண்டு நாட்களில் வசூலில் 250 கோடி ரூபாயை எட்டி சாதனை படைக்கிறது.
Coolie Movie 2nd Day Box Office Collection in Tamil
Coolie Movie 2nd Day Box Office Collection in Tamil
1 min read

ரஜினியின் 50 ஆண்டு திரைப்பயணம் :

Coolie Movie 2nd Day Box Office Collection : ரஜினிகாந்த் திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு பெற்ற நிலையில், இந்த ஆண்டு வெளியாகும் அவரது படம் எதிர்பார்ப்பை எகிறச் செய்து இருந்தது. கடந்த முறை அவரது ’ஜெயிலர்’ படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

’கூலி’ பாக்ஸ் ஆபீஸ் ஹிட்! :

இந்தநிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரும் நிலையிலும் வசூலில் உலகளவில் எந்தவித பாதிப்பும் இன்றி கூலி வெற்றி நடைபோட்டு வருகிறது.

முதல்நாள் வசூல் ரூ.150 கோடி :

உலகம் முழுவதும் படத்தின் முதல் நாள் வசூல் ரூ.151 என சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. மேலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையை ‘கூலி’ பெற்றது.

இதனையடுத்து பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர் சாக்னில்க் தளத்தின் படி, கூலி இரண்டாம் நாள் வசூலாக படம் ரூ.118 கோடி மேல் வசூலித்துள்ளதாக(Coolie Movie 2nd Day Box Office Collection) கணித்துள்ளது.

இரண்டாம் நாளில் காலை மற்றும் பிற்பகல் காட்சிகள் 63.86% மற்றும் 86.25% ஆகவும், மாலை மற்றும் இரவு காட்சிகள் முறையே 86.37% மற்றும் 86.33% ஆக பதிவாகி உள்ளன.

2 நாட்களில் ரூ.250 கோடி வசூல் :

அதிகபட்சமாக சென்னையில் 721 காட்சிகள், பெங்களூருவில் 752 காட்சிகள் திரையிடப்பட்டன. சென்னையில் இரண்டாம் நாளில் 96.50% என்ற உச்சக்கட்ட வசூலை ’கூலி’ எட்டி பிடித்தது. இதன்காரணமாக, இரண்டு நாட்களில் கூலி உலகம் முழுவதும் ரூ.250 கோடி வசூலை தாண்டும்(Coolie Movie 2nd Day Box Office Collection in Worldwide) எனத் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க : ’கூலி’ முதல் நாள் வசூல் 151 கோடி : ’லியோ’ சாதனை முறியடிப்பு

ரஜினிகாந்தின் கடைசி பிளாக்பஸ்டர் படமான ஜெயிலர் இந்தியாவில் ரூ.100 கோடி வசூலைக் கடக்க மூன்று நாட்கள் ஆனது. அதேவேளையில் கூலி இரண்டு நாட்களில் அந்த மைல்கல்லை எட்டி புதிய சாதனையை படைத்துள்ளதாக சாக்னில்க் தளம் கூறியுள்ளது.

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in