’கூலி’ முதல் நாள் வசூல் 151 கோடி : ’லியோ’ சாதனை முறியடிப்பு

Coolie Movie Box Office Collection Day 1 : ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் முதல் நாளில் 151 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது
Coolie Movie Box Office Collection Day 1
Coolie Movie Box Office Collection Day 1
1 min read

வசூலில் லியோவை வீழ்த்திய கூலி :

Coolie Movie Box Office Collection Day 1 : தமிழ் படங்களில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படம் முதல் நாளில் ரூ.148 கோடி வசூல் செய்தது. அதுவே தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்திருக்கிறது ‘கூலி’. முதல் நாளில் ரூ.151 கோடி வசூல் செய்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

கூலி வசூல் ரூ.151 கோடி :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘கூலி’. மாபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று ரிலீசானது. வெளிநாடுகளில் முன்பதிவில் ‘லியோ’ படத்தின் சாதனையை முறியடித்து வந்தது ’கூலி’. இதனால் முதல் நாள் வசூலில் ‘லியோ’ சாதனையை முறியடிக்கும் என்று பலரும் கருதினார்கள். அதன்படியே ‘கூலி’ முறியடித்து முதல் இடத்தினை பிடித்து இருக்கிறது.

லோகேஷ் இயக்கத்தில் ‘லியோ’, ‘கூலி’ :

‘லியோ’ மற்றும் ‘கூலி’ ஆகிய இரண்டு படங்களுமே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது. கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வரும் வார இறுதி நாட்களில் ‘கூலி’ பெரிய வசூல் சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : டிக்கெட் முன்பதிவு மூலம் 2 மில்லியன் டாலர்கள் : சாதித்த ’கூலி’

1,000 கோடி வசூல், சாதனை எட்டப்படுமா? :

ஆயிரம் கோடி வசூலாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நாட்களில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே இந்த சாதனை எட்டப்படுமா என்பது தெரிய வரும். 151 கோடி வசூலை(Coolie Box Office Collection) ’ரிக்காரெட் மேக்கர், ரிக்கார்டு பிரேக்கர்’ என குறிப்பிட்டு தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் போஸ்டர் வெளியிட்டு இருக்கிறது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in