வெளியான முதல் நாளிலேயே ரூ.15,456 கோடி வசூலித்து 'ஜிடிஏ 6' உலக சாதனை: 'தி ஒடிஸி' திரைப்படத்தின் மொத்த வசூலை முறியடித்தது!

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'ஜிடிஏ 6' வீடியோ கேம், முதல் நாளிலேயே ரூ.15,456 கோடி வருவாய் ஈட்டி புதிய உலக சாதனை படைத்துள்ளது.
GTA 6 First Day Revenue Record Sales PlayStation Xbox
GTA 6 First Day Revenue Record Sales PlayStation Xboxsource:thamizhalai
1 min read

GTA 6 First Day Revenue Record Sales PlayStation Xbox

முதல் நாளிலேயே ரூ.15,456 கோடி வருவாய்

நீண்ட காலமாக வீடியோ கேம் ரசிகர்கள் எதிர்பார்த்த 'ஜிடிஏ 6' (Grand Theft Auto VI) கேம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், வெளியான முதல் நாளிலேயே 1.84 பில்லியன் டாலர் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

1,905 கோடி பிரதிகள் விற்பனை

இந்திய மதிப்பில் சுமார் 15,456 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதுவரையில் இந்த வீடியோ கேமின் 19.05 மில்லியன் பிரதிகள், இந்திய மதிப்பில் 1,905 கோடி பிரதிகள் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முறியடிக்கப்பட்ட சாதனைகள் மற்றும் விற்பனை விவரம்

கடந்த ஜூலை மாதத்தில் வெளியான தி ஒடிஸி திரைப்படம் உலகளாவிய அளவில் சுமார் ரூ. 15,162 கோடி (1.805 பில்லியன் டாலர்) வசூலித்து இருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் மொத்த வசூலையும், 'ஜிடிஏ 6' வெளியான முதல் நாளிலேயே முறியடித்து சாதனை படைத்துள்ளது.

முன்பதிவு மைல்கல்

அதிலும் குறிப்பாக வீடியோ கேம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே சுமார் ரூ. 8,400 கோடி (1 பில்லியன் டாலர்) வருவாய் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளது.

3 பில்லியன் டாலர் இலக்கு

நடப்பு ஆண்டு இறுதிக்குள் 'ஜிடிஏ 6' கேமின் வருவாய் சுமார் ரூ. 25,200 கோடியைத் (3 பில்லியன் டாலர்) தாண்டும் எனத் துறை சார்ந்த ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

பிளே ஸ்டேஷன் vs எக்ஸ் பாக்ஸ் விற்பனை

மொத்த விற்பனையில் சுமார் 75 சதவீதம் பிளே ஸ்டேஷன் (PlayStation) பதிப்பிற்கும், மீதமுள்ள 25 சதவீதம் எக்ஸ் பாக்ஸ் (Xbox) கன்சோல்களுக்கும் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: “2035ல் 257 கோடி இஸ்லாமியர்கள்” : உலகளவில் முதலிடம், ஆய்வறிக்கை தகவல், 2வது இடத்திற்கு சரியும் கிறிஸ்தவர்கள்..!

==================