Actress Lakshmi Menon Kidnapping Case Update in Tamil
Actress Lakshmi Menon Kidnapping Case Update in Tamil

ஆள்கடத்தல் வழக்கில் லட்சுமி மேனன்! : தலைமறைவு, தேடும் போலீஸ்

Actress Lakshmi Menon Case Update : ஐடி ஊழியரை காரில் கடத்தி தாக்கிய வழக்கில், தலைமறைவாக உள்ள நடிகை லட்சுமி மேனனை கேரள போலீசார் தேடி வருகிறார்கள்.
Published on

நடிகை லட்சுமி மேனன் :

Actress Lakshmi Menon Case Update : கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை லட்சுமி மேனன். மலையாளத்தில் அறிமுகமாகி, பின்னர் தமிழில் சுந்தர பாண்டியன், கும்கி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர். கொம்பன், வேதாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தாலும், அதன் பின்னர் போதிய வாய்ப்புகள் இன்றி மார்க்கெட்டை இழந்தார். தமிழ்நாட்டை தவிர்த்து மீண்டும் கேரளா பக்கமே ஒதுங்கிய லட்சுமி மேனன், தற்போது ஆட்கடத்தல் வழக்கில் சிக்கி சர்ச்சைக்கு ஆளாகி உள்ளார்.

மதுபான பாரில் மோதல் :

27 வயதான லட்சுமி மேனன்(Lakshmi Menon) தனது நண்பர்களாக மிதுன், அனீஷ் உள்ளிட்டோருடன் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள மதுபான பாருக்கு சென்றார். அப்போது அங்கு மது அருந்த வந்த மற்றொரு கும்பலுக்கும், லட்சுமி மேனனின் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பும் ஆவேசமாக மோதிக் கொண்டன.

இதனால், கடுப்பான லட்சுமி மேனன் தரப்பு, பார் மூடும் நேரம் பார்த்து, காரில் புறப்பட்ட எதிர்கும்பலை பின்தொடர்ந்தது. வழியில் காரை மறித்து, அதில் இருந்த ஐடி ஊழியரை கடத்தி சென்றனர். அந்த நபரை சரமாரியாக லட்சுமி மேனன் தரப்பு தாக்கி(Actress Lakshmi Menon Kidnapping Case) இருக்கிறது. சாதாரண மோதல் ஆட்கடத்தலில் முடிந்தது.

ஆட் கடத்தல், ஐடி ஊழியர் படுகாயம் :

தாக்குதலில் பலத்த காயமடைந்த ஐடி ஊழியர், அவரது நண்பர்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி எர்ணாகுளம் காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

லட்சுமி மேனன் நண்பர்கள் கைது :

அதன் பேரில் கேரள போலீசார் வழக்கு பதிந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். லட்சுமி மேனனின் நண்பர்களான மிதுன், அனீஷ், சோனாமோல் ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கடத்தல், அடித்து சித்ரவதை உள்ளிட்ட 7 பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க : பாஜகவில் இணைந்தார் நடிகை கஸ்தூரி : நயினார் நாகேந்திரன் வரவேற்பு

லட்சுமி மேனன் தலைமறைவு :

லட்சுமி மேனனையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர போலீசார் முடிவு செய்தனர். ஆனால் நண்பர்கள் கைது செய்யப்பட்ட தகவல் தெரிந்ததும், லட்சுமி மேனன் தலைமறைவானார். அவர் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

====

logo
Thamizh Alai
www.thamizhalai.in