
hombale films films producedபிரகலாதன் கதை - மகாவதார் நரசிம்மா :
Mahavatar Narsimha Box Office Collection : விஷ்ணு பகவான் மீது பிரகலாதன் கொண்டிருந்த தீவிர பக்தி, அதன் காரணமாக நரசிம்ம அவதாரம் என புராண கதை இறை நம்பிக்கையின் சிறப்பை கூறுகிறது. அத்தகைய பிரகலாதனின் கதையை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம் தான் ‘மகாவதார் நரசிம்மா’.
மக்களிடம் அமோக வரவேற்பு :
ஜூலை 25ம் தேதி(Mahavatar Narsimha Release Date) பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால் இதர மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அனிமேஷன் திரைப்படம் என்பதால் அனைத்து மொழிகளிலும் வசூலை குவித்து வருகிறது.
300 கோடியை கடந்து வசூல் :
‘மகாவதார் நரசிம்மா’ திரைப்படம் ரூ.300 கோடி வசூலைக் கடந்திருப்பதாக(Mahavatar Narsimha Box Office Collection) படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். அஸ்வின் குமார் இயக்கிய இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்து இருக்கிறார்.
தொடர்ந்து அனிமேஷன் படங்கள் :
ஹோம்பாளே பிலிம்ஸ்(Hombale Films) வழங்க கினிம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. மகாவதார் நரசிம்மா படத்தின்(Mahavatar Narsimha Success) வெற்றியை தொடர்ந்து, தொடர்ச்சியாக அனிமேஷன் படங்களை உருவாக்க ஹோம்பாளே நிறுவனம் திட்டமிட்டு அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறது.
மேலும் படிக்க : 500 கோடியை எட்டிய ‘கூலி’ திரைப்படம் : ரஜினிகாந்த் புதிய சாதனை
அதிக வசூல், புதிய சாதனை :
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ‘மகாவதார் நரசிம்மா’ அனிமேஷன் திரைப்படம்(Mahavatar Narsimha Animation Film Collection), ஹாலிவுட் படங்களுடன் போட்டி போடும் வகையில், வசூல் செய்திருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்தியாவில் அதிக வசூல் செய்த அனிமேஷன் திரைப்படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியும் இருக்கிறது.
==============