OTT-ல் ரிலீஸ் ஆன ரஜினிகாந்தின் ’கூலி’ : உலகளவில் 514 கோடி வசூல்

Coolie Movie Collection OTT Release Date Update : நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் இன்று ஓடிடியில் ரிலீசாகி இருக்கிறது.
Coolie Movie Collection OTT Release Date Update in Tamil
Coolie Movie Collection OTT Release Date Update in Tamil
1 min read

ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் :

Coolie Movie Collection OTT Release Date in Tamil : ரஜினிகாந்தின் அதிரடி ஆக்‌ஷன் படமான 'கூலி' திரையரங்குகளில் வெளியான 29 நாட்களுக்கு பிறகு OTT தளத்தில் கால்பதித்து உள்ளது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாக சறுக்கினாலும் வசூல் ரீதியாக வெற்றி நடை போட்டது. தேவா என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். அனிருத் இசையமைத்திருந்தார். ஒளிப்பதிவாளராக கிரீஷ் கங்காதரனும், படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜும் பணியாற்றி இருந்தனர். இது ரஜினிகாந்தின் 171வது படமாகும்.

பான் இந்தியா படம் கூலி :

ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர், உபேந்திரா, ஆமிர் கான், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், ரசிதா ராம், ரேபா மோனிகா ஜான், மோனிஷா பிளஸ்ஸி, கண்ணா ரவி, ரவி ராகவேந்திரா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பூஜா ஹெக்டே 'மோனிகா' பாடலுக்கு நடனமாடி உள்ளார். மகேஷ் மஞ்ச்ரேக்கர், ஆமிர் கானின் தந்தையாக சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இது பான் இந்தியா படமாக திரையிடப்பட்டது.

ரூ.350 கோடி பட்ஜெட்டில் கூலி? :

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியான இப்படத்தின் பட்ஜெட் ரூ.350 முதல் 400 கோடி வரை இருக்கும்(Coolie Movie Budget) எனக் கூறப்படுகிறது. இதில் ரஜினிகாந்தின் சம்பளம் மட்டும் ரூ.150 கோடி எனத் தெரிகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சம்பளம் 50 கோடியாம். இதன்மூலம் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம், வாங்கும் இயக்குனராக உருவெடுத்தார் லோகேஷ். இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்த ஆமிர் கான் சம்பளம் வாங்கவில்லை.

மேலும் படிக்க : 23 நாளில் 510 கோடி வசூலித்த ‘கூலி’ : செப்.11ம் தேதி OTTல் ரிலீஸ்

லியோ சாதனையை முறியடிக்காத கூலி

1000 கோடி வசூல் இலக்காக இருந்தாலும், அதில் பாதியளவுதான் கிடைத்து இருக்கிறது. மேலும், இப்படம் விஜய்யின் ‘லியோ; வசூல் சாதனையையும் முறியடிக்கவில்லை. லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.610 கோடி(Leo Box Office Collection) வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in