

Rashmika Mandanna - Vijay Deverakonda Wedding Video Stream in OTT Update : நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் தேவரகொண்டா திருமணம் உதய்பூரில் நடந்து முடிந்துள்ளது.
திருமண சடங்குகள்
விஜய் தேவரகொண்டா ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவரது முறைப்படி திருமணம் இனிதாய் நடைபெற்றுள்ளது.
அதேபோல் ராஷ்மிகா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால் மாலையில் கர்நாடக முறைப்படி சடங்குகள் நடக்கிறது.
இருவரின் குடும்ப கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக இருமுறை சடங்குகள் நடத்தப்படுகிறது.
காதல் ஜோடி To திருமண ஜோடி
கீதா கோவிந்தம் திரைப்படத்தில் காதல் ஜோடியாக நடித்து பல போராட்டங்களுக்குப் பிறகு அவர்களுக்கு திருமணம் நடைபெறும்.
கீதா கோவிந்தம்
முதல் படத்தில் திருமணக் காட்சியில் நடித்தவர்கள் மனப்பூர்வமாக காதலித்து தற்போது நிஜத்திலும் கணவன் மனைவியாக தங்களது திருமண வாழ்வை தொடங்கி உள்ளனர்.
திருமண புகைப்படங்கள்
திருமணம் முடிந்தும் இதுவரை திருமணம் சார்ந்த புகைப்படங்கள் வெளிவரவில்லை.
திருமண நெருக்கத்தில் அறிவிப்பு
திருமணம் குறித்தான அறிவுப்புகளையே இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் தான் இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள் என்பதால், புகைப்படங்களும் சற்று தாமதமாகத்தான் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : திருமணத்தை உறுதிசெய்த ராஷ்மிகா : விஜய் தேவரகொண்டா எங்கே, எப்போது தெரியுமா!
திருமண வீடியோ
எனினும் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா தரப்பில் இருந்து சிலர் குறு கானொளிகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
எனினும் ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் திருமண கோலத்தில் இருப்பார்கள், எப்போது திருமண புகைப்படங்களை வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
ஐதராபாத்தில் வரவேற்பு
திருமணம் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் அடுத்ததாக ஐதராபாத்தில் மார்ச் 4ஆம் தேதி பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
வரவேற்பு நிகழ்ச்சியில் இந்திய திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.
திருமணம் ஓடிடியில் வெளியாகாதா?
பிரபல ஓடிடி நிறுவனம் நயந்தார விக்னேஷ் சிவன் திருமணத்தை ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டதைப்போல் விஜய் மற்றும் ராஷ்மிகா திருமணத்தையும் பதிவு செய்து ஆவணப்படுத்த ரூ.60 கோடி கொடுக்கவும் தயாராக இருப்ப்பதாகவும் பேசப்பட்டு வந்தது.
விஜய் தேவரகொண்டா மறுப்பு
ஆனால், திருமணம் என்பது இரு குடும்பங்களின் தனிப்பட்ட விஷயம். அதை விற்பனை செய்ய முடியாது என விஜய் தேவரகொண்டா மறுத்து விட்டதாகவும் சொல்லப்பட்டது.
இதையடுத்து, திருமண வீடியோ முழுவதுமாக பார்க்க முடியாதா என்ற ஏக்கம் ரசிகர்களை ஆட்கொண்டது.
ரசிகர்கள் கணித்தது நடந்தது
எனினும் 2020 ஆண்டு முதல் இவர்கள் காதலித்து வருவதாக ரசிகர்கள் சொல்லிக்கொண்டே இருக்க, அவர்கள் தங்களை நண்பர்கள் என்றே சொல்லிக்கொண்டனர்.
தற்போது ரசிகர்கள் கணித்தது போலவே அவர்கள் காதல் திருமணத்தில் முடிந்து விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் கணவன் மனைவியாக இணைந்திருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.