
சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் :
India's Most Profitable Film 2025 Tourist Family : குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் சில படங்கள், அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் வசூலை அள்ளிக் குவிக்கின்றன. சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களே மக்களின் சாய்ஸ் என்பது மீண்டும் உண்மையாகி வருகிறது. 2025ல் குறைந்த பட்ஜெட் படங்கள் சாதித்து வருகின்றன.
சாதித்த ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் :
அந்தவகையில், தமிழில் வெளியான டூரிஸ்ட் பேமிலி(Tourist Family) திரைப்படமும் ஆச்சரியத்தை தந்திருக்கிறது இயக்குநர், தயாரிப்பாளர் என்ற அடையாளத்தை ஏற்கனவே திரைத்துறையில் பெற்றவரான சசிக்குமார்(Sasikumar), சிம்ரன், யோகிபாபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். இலங்கையிலிருந்து சட்டத்துக்கு புறம்பாக வரும் குடும்பத்தின் நிலை குறித்தும், மனித நேயத்தின் தேவை பற்றியும் பேசும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
7 கோடி செலவு - 90 கோடி வசூல் :
இந்த படத்தின் தயாரிப்பு செலவு ரூ.7 கோடி மட்டுமே(Tourist Family Budget). ஆனால் உலகம் முழுவதும் கிடைத்த லாபம் .90 கோடி. அதாவது முதலீட்டு தொகையை விட 1200 சதவீதத்துக்கும் அதிகம். 2025ம் ஆண்டு இந்திய திரைப்பட வரலாற்றில் எந்த ஒரு படமும் இப்படி ஒரு வசூல் சாதனையை பிடித்தது இல்லை என்கிறது சாக்நில்க்(Sacnilk) என்ற நிறுவனம்.
டூரிஸ்ட் பேமிலி - 1,200 சதவீதம் லாபம் :
டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் 1,200 சதவீதம் லாபம் ஈட்டிய நிலையில்(Tourist Family Profit), அதற்கு அடுத்தபடியாக, விக்கி கௌஷல், ரஷ்மிகா மந்தன்னா நடிப்பில் வெளியான ’சாவா’ பாலிவுட் படம் 800 சதவீதம் லாபம் ஈட்டியிருக்கிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி(Tourist Family Movie) படம் பார்க்கவில்லையா? இன்னுமா பாக்கல? அந்தப் படத்தை முதலில் பாருங்க என சமூக வலைதளங்களில் செய்யப்பட்ட விளம்பரங்கள் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது.
====