’5 கோடி பட்ஜெட், 100 கோடி வசூல்’ : கன்னட படம் ’சு ஃப்ரம் சோ’

Su From So Movie Collection : அறிமுக இயக்குநர் ஜே.பி. துமிநாட் இயக்கிய ’சு ஃப்ரம் சோ’ என்ற கன்னட படம், வசூலில் 100 கோடிகளை குவித்து சாதனை படைத்துள்ளது.
Su From So Movie Collection
Su From So Movie Collection
1 min read

கன்னட சினிமாவின் அடையாளம் ’கேஜிஎஃப்’ :

Su From So Movie Collection : தென்னிந்திய சினிமா, இந்திய சினிமாவை பொருத்துவரை கன்னட படங்கள் பெரிதாக சாதித்தது கிடையாது. கமர்ஷியலாக இங்கு எடுக்கப்படும் ஓராளவுக்கு ஓடி, வசூலை பார்க்கும், அவ்வளவுதான். இதை உடைத்த படம்தான் ’கேஜிஎஃப்’. பான் இந்தியா படமாக திரைக்கு வந்த இந்தப்படம் ரூ.1,300 கோடியை வசூலித்து இந்தியா முழுவதும் பேச வைத்தது.

கன்னட படம் ‘சு ஃப்ரம் சோ’ :

இந்தநிலையில், ஜூலை 25ம் தேதி வெளியான(Su From So Movie Release Date) கன்னட படம் ‘சு ஃப்ரம் சோ’ (சுலோச்சனா ஃபிரம் சோமேஷ்வரா). பெரிய அளவில் எந்தவித விளம்பரமும் இல்லாமல் வெளியானது. படம் தொடர்பான பாசிடிவ் விமர்சனங்கள் பரவ, தியேட்டர்கள் ஹவுஸ் புல் ஆகின. 5 கோடி ரூபாயில் உருவான இந்தப் படம்(Su From So Movie Budget). 100 கோடி வசூலை தாண்டி, சக்கைபோடு போட்டு வருகிறது.

வசூலை அள்ளும் ‘சு ஃப்ரம் சோ’ :

இந்தப் படம் இந்தியாவில் ரூ.77.86 கோடி வசூலையும், வெளிநாடுகளில் ரூ.14.15 கோடியையும் வசூலித்துள்ளது. இதன் மூலம், வெளியான 24 நாட்களில் இப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ.105 கோடியாக(Su From So Movie Collection Worldwide) உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வெளியான ‘கூலி’, ‘வார் 2’ போன்ற படங்களுடன் போட்டிப் போட்டு ஓடிக் கொண்டிருக்கிறது ‘சு ஃப்ரம் சோ’.

மேலும் படிக்க : Coolie : ரஜினியின் ’கூலி’ 400 கோடி : விமர்சனங்களை தாண்டி வசூல்

கதை நன்றாக இருந்தால் ஹிட் தான் :

எவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவான படமாக இருந்தாலும் சரி, சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் சரி, கதை, திரைக்கதை நன்றாக இருந்தால் விளம்பரம் இல்லாமல் படம் மக்களிடம் போய் சேரும் என்பதற்கு ‘சு ஃப்ரம் சோ’(Su From So Movie) முக்கியமான சான்று.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in