
சுழற்பந்து வீச்சாளர் ரசீத் கான் :
Rashid Khan T20i Most Wickets World Record : சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பவர் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான். மணிக்கட்டு பந்துவீச்சாளரான இவர் தன்னுடைய லெக் ஸ்பின் மற்றும் கூக்ளி பந்து வீச்சுகளால் பேட்ஸ்மேன்களை திணற அடிப்பதில் வல்லவர். இவரது பந்தை எதிர்கொள்வது என்றால், புதியவர்களுக்கு நடுக்கும் தான். பந்துவீச்சில் சிம்மசொப்பனமாக திகழும் ரசீத் கான், ஆட்டத்தையே மாற்றக் கூடிய வீரராக திகழ்ந்து வருகிறார்.
உலக சாதனையாளர் ரஷீத் கான் :
டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர், 661 விக்கெட்டுகள். அதிவேகமாக 100 சர்வதேச டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என பல உலக சாதனைகளை கையில் வசம் வைத்திருக்கிறார் ரஷீத் கான், தற்போது மற்றொரு உலக சாதனையை படைத்து அவர் அசத்தி உள்ளார்.
டி 20 கிரிக்கெட் தொடர் :
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், யுஏஇ அணிகளுக்கு இடையே முத்தரப்பு டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் லீக் போட்டி ஒன்றில், ஆப்கானிஸ்தான் - யுஏஇ அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி செடிகுல்லா அடல், இப்ராஹிம் ஜத்ரான் இருவரின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவரில் 188 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ஜத்ரான் 63 ரன்கள் அடித்தார்.
மேலும் படிக்க : ஐபிஎல் கிரிக்கெட் இருந்து அஸ்வின் ஓய்வு: T20 லீக்கில் விளையாடுவார்
அதனைத் தொடர்ந்து விளையாடிய யுஏஇ அணி 20 ஓவர் முடிவில் 150 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.
ரஷீத் கான் புதிய உலக சாதனை :
இந்தப் போட்டியில், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக மாறி உலக சாதனை படைத்தார்(Rashid Khan T20 World Record). 164 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்தின் டிம் சவுத்தீயை பின்னுக்கு தள்ளி 165 விக்கெட்டுகளுடன் இந்த சாதனை படைத்து இருக்கிறார் ரசீத் கான்.
======