பார்சிலோனா கார் பந்தயம் : ஜிடி3 ஏஎம் பிரிவில் 2-ம் இடம் பிடித்து அஜித்குமார் அணி சாதனை!

பார்சிலோனா கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி ஜிடி3 ஏஎம் (GT3 Am) பிரிவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
Ajith Kumar Racing
Ajith Kumar Racingsource:ajithkumarracing
1 min read

Ajith Kumar's team has achieved a milestone by securing second place in the GT3 Am category at the Barcelona car race.

ஸ்பெயினில் நடைபெற்ற 24 மணி நேர பார்சிலோனா கார் பந்தயத்தில் அஜித்குமார் அணி 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

அஜித்குமார் ரேஸிங் அணியின் வெற்றி

சினிமா மற்றும் கார் பந்தயம் என இரண்டிலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நடிகரும் ரேசருமான அஜித்குமார், தனது 'அஜித்குமார் ரேஸிங்' அணி மூலம் சர்வதேச கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்றும் வெற்றி பெற்றும் வருகிறார்.

அந்தவகையில், ஸ்பெயினில் நடைபெற்ற 24 மணி நேர பார்சிலோனா கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி ஜிடி3 ஏஎம் (GT3 Am) பிரிவில் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் சாதனைகள்

சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற மிச்செலின் லீ மான்ஸ் தொடரைத் தொடர்ந்து, ஸ்பெயின் பார்சிலோனாவில் நடந்த 24ஹெச் கார் பந்தயத்தின் ஜிடி புரோ-ஏஎம் பிரிவில் அஜித்தின் கார் 2-ம் இடத்தை பிடித்தது.

மேலும், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 5-வது இடத்தையும், கன்ஸ்டிரக்டர்ஸ் சாம்பியன்ஷிப்பில் 3-வது இடத்தையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்திய தேசியக் கொடியுடன் கொண்டாட்டம்

இந்த மகத்தான வெற்றியை, போடியத்தில் கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு தனது குழுவினருடன் கோப்பையைப் பெற்று அஜித் குமார் உற்சாகமாகக் கொண்டாடினார்.

இவருக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ”டெங்கு, உண்ணி காய்ச்சல்” : தமிழகத்தை அச்சுறுத்தும் பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கை தீவிரம் : மக்களுக்கு அறிவுறுத்தல்!

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in