Asia Cup T20: வங்கதேசம் அசத்தல் வெற்றி: ஹாங்காங் அணியை வீழ்த்தியது

Hong Kong vs Bangladesh Match Highlights Asia Cup 2025 : ஆசிய கோப்பை லீக் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹாங்காங்கை தோற்கடித்தது.
Hong Kong vs Bangladesh Match Highlights Asia Cup 2025
Hong Kong vs Bangladesh Match Highlights Asia Cup 2025https://x.com/ACCMedia
1 min read

வங்கதேசம் - ஹாங்காங் மோதல் :

Hong Kong vs Bangladesh Match Highlights Asia Cup 2025 : ஐக்கிய அரபு எமிரேட்சில், ஆசிய கோப்பை 'டி-20' 17வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகளின் அணிகள், இரண்டு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. அபுதாபியில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் வங்கதேசம், ஹாங்காங் அணிகள் மோதின.

ஹாங்காங் அணி 143 ரன்கள் :

டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் லிட்டன் தாஸ், பீல்டிங்கை தேர்வு செய்ய, ஹாங்காங் பேட்டிங்கை கையில் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர், அன்ஷி ராத் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றினார். பின் இணைந்த ஜீஷன் அலி, பாபர் ஹயாத் ஜோடி ஆறுதல் தந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 23 ரன் சேர்த்த போது தன்சிம் ஹசன் சாகிப் பந்தில் ஹயாத் (14) பெவிலியன் திரும்பினார். ஹாங்காங் அணி 15 ஓவரில் 100 ரன்னை எட்டியது. இறுதியில் ஹாங்காங் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்தது.

வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் அபாரம் :

எளிதில் எட்டக் கூடிய இலக்கை விரட்டியது வங்கதேசம். பர்வேஸ் ஹொசைன் எமான் (19), தன்ஜித் ஹசன் (14) ஜோடி தொடக்கத்தில் கைகொடுக்க, பின் இணைந்த கேப்டன் லிட்டன் தாஸ், தவ்ஹித் ஹிரிடோய் ஜோடி நம்பிக்கை தந்தது. இரண்டு பவுண்டரிகளை விரட்டிய லிட்டன் தாஸ், யாசிம் முர்டசா பந்தை சிக்சருக்கு அனுப்பினார். அபாரமாக ஆடிய லிட்டன் தாஸ், 33 பந்தில் அரைசதம் எட்டினார். மூன்றாவது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்த போது அவர் போல்டானார்.

17.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்த வங்கதேச அணி, 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது(Bangladesh Wins Hong Kong Asia Cup 2025). சர்வதேச 'டி-20' அரங்கில் வங்கதேசத்துக்கு எதிராக தனது அதிகபட்ச ஸ்கோரை 143 ரன்களை பதிவு செய்தது ஹாங்காங்.

மேலும் படிக்க : India vs UAE Match : இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இன்று பலப்பரீட்சை

பாகிஸ்தான் - ஓமன் இன்று மோதல் :

துபாயில் இன்றிரவு நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் - ஓமன்(Pakistan vs Oman Asia Cup 2025) அணிகள் மோதுகின்றன.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in