
ஐசிசி தரவரிசை பட்டியல் :
ICC Men's ODI Batting Ranking 2025 List : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி, மாதந்தோறும் சிறந்த அணிகள், பேட்ஸ்மேன், பவுலர்கள் உள்ளிட்டோருக்கான தரவரிசையை வெளியிட்டு வருகிறது. டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.
ஒருநாள் போட்டி - டாப் 10 பேட்ஸ்மேன்கள் :
இந்த நிலையில் சிறந்த ஒருநாள் போட்டிக்கான சிறந்த 10 பேட்ஸ்மேன்கள்(ICC ODI Batting Ranking 2025 List) தரவரிசையில் இந்திய வீரர்கள் 4 பேர் இடம் பிடித்துள்ளனர். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, மார்ச் மாதத்தில் இருந்து எந்த ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவில்லை. இருப்பினும் அவர் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசமை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
முதல் இடத்தில் சுப்மன் கில் :
தரவரிசையில் முதல் இடத்தில் சுப்மன் கில் உள்ளார். ரோஹித் சர்மா 2வது இடத்தில்(Rohit Sharma ODI Rank) இருக்கிறார். 3ஆவது இடத்தில் பாகிஸ்தானை சேர்ந்த பாபர் ஆசம், நான்காவது இடத்தில் விராட் கோலியும் உள்ளனர்.
மேலும் படிக்க : Shubman Gill: ICC ஜூலை மாத சிறந்த வீரர்: "சுப்மன் கில்"க்கு விருது
8வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் :
தர வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் 8-ஆவது இடத்தில் உள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அதிக ரன்களை குவித்ததன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் டாப் 10 இடத்துக்குள் வந்துள்ளார்.