சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் 2025 : கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன்

Cincinnati Open Tennis 2025 Final : சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் விலகியதால், சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் கார்லோஸ் அல்காரஸ்.
Carlos Alcaraz Wins Cincinnati Open Tennis 2025 Final Match
Carlos Alcaraz Wins Cincinnati Open Tennis 2025 Final Matchhttps://x.com/CincyTennis
1 min read

ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி :

Carlos Alcaraz Wins Cincinnati Open Tennis 2025 Final : அமெரிக்காவில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் முதல்நிலை வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், இரண்டாம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

ஜானிக் சின்னருக்கு உடல்நிலை பாதிப்பு :

ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், போட்டி துவங்கியதிலிருந்தே ஜானிக் சின்னர்(Jannik Sinner) சோர்வாக காணப்பட்டார். போட்டியின் முதல் செட்டில் கார்லோஸ் அல்காரஸ் 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த நிலையில், ஜானிக் சின்னர் மேற்கொண்டு விளையாட முடியாமல் விலகிக் கொள்வதாக அறிவித்தார். இதன் காரணமாக இறுதிப் போட்டி 20 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.

வருத்தம் தெரிவித்த ஜானிக் சின்னர் :

தனது திடீர் விலகல் குறித்து வருத்தம் தெரிவித்த ஜானிக் சின்னர், போட்டிக்கு முந்தைய நாளிலிருந்தே தனக்கு உடல்நிலை சரியில்லாமல்(Jannik Sinner Health) இருந்ததாகக் குறிப்பிட்டார். இரவு நேரத்தில் உடல்நிலை தேறிவிடும் என நம்பியதாகவும், ஆனால் நிலைமை மேலும் மோசமடைந்ததாகவும் அவர் கூறினார். ரசிகர்களை ஏமாற்றியதற்காக அவர் மன்னிப்பு கேட்டார்.

கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் :

இந்த வெற்றியின் மூலம் கார்லோஸ் அல்காரஸ்(Carlos Alcaraz) தனது எட்டாவது ஏடிபி மாஸ்டர்ஸ்(ATP Masters Tennis) பட்டத்தை கைப்பற்றினார். போட்டிக்குப் பிறகு பேசிய அல்காரஸ், "இந்த வழியில் கோப்பையை வெல்ல நான் விரும்பவில்லை" என்றார். ஜானிக் சின்னர் விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் படிக்க : முதன்முறையாக விம்பிள்டன் சாம்பியன் : ஜன்னிக் சின்னர் அபாரம்

அமெரிக்க ஓபனில் பங்கேற்பாரா? :

உடல் நலக்குறைவு காரணமாக விலகிய ஜானிக் சின்னர், அடுத்து நடைபெற இருக்கும் அமெரிக்க ஓபன் டென்னிஸ்(American Open Tennis 2025) தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in