21 வயதில் இங்கிலாந்து கேப்டன் : 136 ஆண்டு சாதனை முறியடிப்பு

England Cricket Team Captain Jacob Bethell : இங்கிலாந்து டி 20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கும் ஜேக்கப் பெத்தேல், 136 ஆண்டு கால சாதனையை முறியடித்து இருக்கிறார்.
England Cricket Team Captain Jacob Bethell Against Ireland T20I Series
England Cricket Team Captain Jacob Bethell Against Ireland T20I Serieshttps://x.com/search?q=Jacob
1 min read

21 வயதில் இங்கிலாந்து அணி கேப்டன் :

England Cricket Team Captain Jacob Bethell : அடுத்த மாதம் டப்ளினில் அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி விளையாட இருக்கிறது. அணியின் கேப்டனாக 21 வயதே ஆன ஜேக்கப் பெத்தேல் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டரான ஜேக்கப் பெத்தேல் அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்து அணியின் இளைய கேப்டன் ஆனார்(England Youngest Captain). இதன் மூலம் 136 ஆண்டுகால வயது சாதனையை முறியடித்துள்ளார்.

டி.20 கேப்டன் ஹாரி புரூக் :

இந்தியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தோடரில்(IND vs ENG Test Series) விளையாடிய டி20 கேப்டன் ஹாரி புரூக் இந்தத் தொடரில் ஆடவில்லை. எனவே புதிய கேப்டனாக ஜேக்கப் பெத்தேல்(Jacob Bethell Captain in Ireland T20I Series) நியமிக்கப்பட்டார். அதேசமயம், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடவிருக்கும் ஒருநாள், டி20 தொடருக்கு ஹாரி புரூக் கேப்டனாக திரும்புவார்.

இளம்புயல் ஜேக்கப் பெத்தேல் :

ஜேக்கப் பெத்தேல்(Jacob Bethell) கடந்த ஆண்டுதான் அனைத்து விதமான போட்டிகளிலும் பங்கேற்க இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார்.

இவருக்கு முன்பாக இளம் கேப்டனாக உயர்த்தப்பட்டு இங்கிலாந்து அணியை வழி நடத்தியவர் மாண்ட்டி பௌடன். இவர் அந்த பொறுப்புக்கு வரும் போதி வயது 23. இது நடந்த ஆண்டு 1889. இதைத்தொடர்ந்து, 136 ஆண்டுகள் கழித்து இப்போது ஜேக்கப் பெத்தேல் 21 வயதில்(Jacob Bethell Age) கேப்டனாகியுள்ளார்.

மேலும் படிக்க : உள்ளூர் டெஸ்ட்களில் அதிக சதம் : இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சாதனை

ரக்பியால் கிரிக்கெட் பக்கம் வந்தவர் :

மேற்கு இந்திய தீவுகளில் பிறந்த ஜேக்கப் பெத்தேல்(Jacob Bethell Biography in Tamil), உண்மையின் அந்நாட்டின் அணிக்காக விளையாட வேண்டியவர். 13 வயதில் ரக்பிக்கான ஸ்காலர்ஷிப் கிடைக்க இங்கிலாந்துக்கு குடி பெயர்ந்தார். அதிலிருந்து அவருக்கு ஏற்றம்தான். இங்கிலாந்து அணியின் டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில், ரன் குவிக்கும் மிஷினாக அசத்தி வருகிறார் ஜேக்கப் பெத்தேல். இடது கை பேட்டிங், இடது கை ஸ்பின் பவுலிங் இவரது திறமைக்கு சான்றாக உள்ளன.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in