
ஓவல் டெஸ்ட், யாருக்கு வெற்றி? :
Joe Root Home Test Centuries Record 2025 : இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஓவல் டெஸ்ட்டில்(Ovel Test) இங்கிலாந்து வெற்றி பெற்றால், தொடரை கைப்பற்றும், இந்தியா வெற்றி பெற்றால் தொடர் சமன் ஆகும் என்பதால், முடிவு எப்படி இருக்கும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.
35 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி :
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களும், இங்கிலாந்து 247 ரன்களும் எடுத்திருந்தது. 2 ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி 396 ரன்கள் குவித்த நிலையில், இங்கிலாந்து அணி 374 ரன்கள் எடுத்தால் வெற்றி(England) என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து வீரர் ஜோ ருட்(Joe Root Centuries) சதம் அடித்து அணியை வலிமையான நிலைக்கு கொண்டு சென்றார். 137 பந்துகளில் 12 பவுண்டரியுடன் அவர் சதம் அடித்தார்.
4 விக்கெட்டுகளை சாய்த்தால் இந்தியா வெற்றி :
இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி 35 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும். அதேசமயம், இந்தியா வெற்றிபெற இன்னும் 4 விக்கெட்டுகள் தேவை. துல்லியமான பந்து வீச்சால் 4 விக்கெட்டுகளை இந்தியா சாய்த்து வெற்றியை வசப்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
மேலும் படிக்க : டெஸ்ட்டில் பிராட்மேன், பாண்டிங் சாதனை முறியடிப்பு: ஜோ ரூட் அசத்தல்
உள்ளூர் மண்ணில் ஜோ ரூட் சாதனை :
சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் உள்ளூர் போட்டிகளில் 24 சதம் அடித்து சாதனை(Joe Root Home Centuries) படைத்துள்ளார். இதன் மூலம் உள்ளூர் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை வசப்படுத்தினார் ஜோ ரூட்.
இந்த வரிசையில் ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங், தென்னாப்பிரிக்க அணியின் ஜேகஸ் கல்லீஸ், இலங்கையின் மகேலா ஜெயவர்த்தனே ஆகியோர் உள்ளூரில் நடந்த போட்டிகளில் 23 சதங்கள் விளாசியுள்ளனர். இந்த சாதனையை ஜோ ரூட் முறியடித்து உள்ளார்.
=====