
ரன்னிங் மெஷின் சுப்மன் கில் :
Shubman Gill in IND vs ENG 5th Test Match 2025 : இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள சுப்மன் கில், அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நடைபெற்ற அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளார். ஏனெனில் நடைபெற்று வரும் இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு இரட்டை சதம் உட்பட நான்கு சதங்களுடன் 722 ரன்கள் குவித்துள்ளார்.
இதன் காரணமாக அவரது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் சராசரி 40க்கு மேல் சென்றுள்ளது. இன்று தொடங்கிய 5வது டெஸ்ட்டில் களமிறங்கும் கில், பிராட்மேனின் 90 ஆண்டுகால சாதனையை முறியடிக்க ஆர்வமுடன் இருக்கிறார்.
கவாஸ்கம் சாதனையை முறியடிப்பாரா கில்? :
1978-79ம் ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் 732 ரன்கள் குவித்து இருந்தார். இதுவே டெஸட் தொடரில் இந்திய பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. இதைமுறியடிக்க சுப்மன் கில்லுக்கு இன்னும் 11 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
பிராட்மேன் சாதனை முறியடிக்கப்படுமா? :
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவானான டான் பிராட்மேன், 1936-37 ஆம் ஆண்டுகளில் டெஸ்ட் தொடரில் 810 ரன்கள் குவித்ததே இதுவரை உலக சாதனையாக இருந்து வருகிறது. இந்த சாதனையை முறியடிக்க சுப்மன் கில்லுக்கு இன்னும் 89 ரன்கள் தேவை. அதனை சுப்மன் கில் அடிக்கும் பட்சத்தில் இந்த சாதனை எதிர்காலத்தில் முறியடிக்கப்படாத சாதனையாக வரலாற்றில் நிற்க வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க : டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை:6வது இடத்தில் சுப்மன் கில்