
Shubman Gill Test Ranking Update : இந்தியா - இங்கிலாந்து இடையே டெஸ்ட் தொடர்(IND vs ENG Test) நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட்டை இங்கிலாந்து கைப்பற்ற, 2வது டெஸ்ட்டில் இந்தியா வாகை சூடி அசத்தியது. இந்தநிலையில் டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு இருக்கிறது.
ஹாரி ப்ரூக் முதலிடம் :
முதல் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணி வீரர் ஜோரூட்டை பின்னுக்கு தள்ளி சக அணி வீரரான ஹாரி ப்ரூக் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
886 புள்ளிகளை ஹாரி புரூக் பெற்றுள்ளார். ஜோ ரூட்டை 868 புள்ளிகளுடன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.
4வது இடத்தில் ஜெய்ஸ்வால் :
நியூஸிலாந்தின் கேன் வில்லியம்சன் (867) 3வது இடத்திலும், இந்தியாவின் யஷஸ்வி ஜெய்ஸ்வால்(Yashasvi Jaiswal) (858) 4வது இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் (813) 5வது இடத்திலும் உள்ளனர்.
மேலும் படிக்க : யு 19 தொடரில் புதிய வரலாறு : 355 ரன்கள் குவித்த சூரியவன்ஷி
6வது இடத்தில் சுப்மன் கில் :
இங்கிலாந்து அணிக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 269 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 161 ரன்களும் விளாசிய இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்(Shubman Gill Test Rank) 15 இடங்கள் முன்னேறி 6வது இடத்தை பிடித்துள்ளார். தரவரிசையில் அவர் டாப் 10க்குள் இடம் பெறுவது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன்னர் அவர், 2023ம் ஆண்டு செப்டம்பரில் 14வது இடத்தை பிடித்திருந்தார்.
இதனிடையே இந்தியா - இங்கிலாந்து(India vs England 3rd Test Match) அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
====