Shubman Gill: ICC ஜூலை மாத சிறந்த வீரர்: "சுப்மன் கில்"க்கு விருது

Shubman Gill in July ICC Men's Player of the Month 2025: ஐசிசியின் ஜூலை மாத சிறந்த வீரருக்கான விருதினை பெற, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் தேர்வாகி இருக்கிறார்.
India Test captain Shubman Gill to July ICC Men's Player of the Month honours 2025
India Test captain Shubman Gill to July ICC Men's Player of the Month honours 2025
1 min read

ஐசிசி சிறந்த விருது :

Shubman Gill in July ICC Men's Player of the Month 2025: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான(ICC) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. அந்தந்த மாதத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர், வீராங்கனைகள் இந்த விருதினை பெறுகின்றனர். அதன்படி ஜூலை மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 என்ற வகையில் பரிந்துரை பட்டியலை வெளியிட்டிருந்தது ஐசிசி.

இந்த பட்டியலில் இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்(Shubman Gill), தென் ஆப்பிரிக்காவின் வியான் முல்டர் மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றனர்.

ஜூலை மாத சிறந்த வீரர் சுப்மன் கில் :

இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஜூலை மாத சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார் சுப்மன் கில். இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம்(India vs England Test Tour 2025) மேற்கொண்டது. ரோகித் சர்மாவின் டெஸ்ட் ஓய்வை அடுத்து இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-2 என்ற கணக்கில் தொடர் சமன் செய்யப்பட்டது.

மேலும் படிக்க : Deepti Sharma: ICC டி20 மகளிர் தரவரிசை : 2ம் இடத்தில் தீப்தி சர்மா

சாதனை நாயகன் சுப்மன் கில் :

இந்த தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் கில்(Shubman Gill) பல்வேறு சாதனைகளை படைத்தார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் நான்கு சதங்களை விளாசினார். இந்திய அணியின் பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத் தியதற்காக, ஐசிசி விருதுக்கு சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க : 89 ரன்கள் எடுத்தால் 90 ஆண்டு சாதனை முறியடிப்பு: சாதிப்பாரா கில்!

மூன்று முறை சிறந்த வீரர் விருது :

இந்த விருதினை சுப்மன் கில் ஏற்கனவே 3 முறை வென்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in