கிராண்ட் ஸ்லாம் செஸ் தொடர் : 6வது இடத்தில் அர்ஜுன் எரிகைசி

Arjun Erigaisi, Praggnanandhaa Ranking in Freestyle Chess : ஃப்​ரீஸ்​டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரின் 4-வது கட்ட போட்டியில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி 6வது இடம் பிடித்தார்.
India's Arjun Erigaisi 6th Place & Praggnanandhaa 7th Position in Freestyle Chess 2025
India's Arjun Erigaisi 6th Rank & Praggnanandhaa 7th Ranking in Freestyle Chess 2025
1 min read

சர்வதேச செஸ் தொடர் :

Arjun Erigaisi, Praggnanandhaa Ranking in Freestyle Chess : அமெரிக்​கா​வின் லாஸ் வேகாஸ் நகரில், ஃப்​ரீஸ்​டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடர் நடை​பெற்​றது. இதன் இறு​திப் போட்​டி​யில்,

அமெரிக்​காவின் லெவன் அரோனியன் 1.5-0.5 என்ற கணக்​கில் சகநாட்டு வீரரான ​ஹான்ஸ் மோக் நீமனை தோற்​கடித்து முதலிடம் பிடித்​தார்.

3வது இடத்தில் மேக்னஸ் கார்ல்சன் :

3வது இடத்​துக்​கான ஆட்​டத்​தில் உலகின் முதல் நிலை வீர​ரான நார்​வே​யின் மேக்​னஸ் கார்ல்​சன்(Magnus Carlsen) 1.5-0.5 என்ற கணக்​கில் அமெரிக்​கா​வின் ஹிகாரு நகமு​ராவை தோற்​கடித்​தார்.

6வது இடத்தில் எரிகைசி :

முதன்முறையாக அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய இந்தியாவின் அர்​ஜுன் எரி​கைசி(Arjun Erigaisi 6th Ranking), 0-2 என்ற கணக்​கில் அமெரிக்​கா​வின் ஃபேபி​யானோ கரு​னா​விடம் தோல்வி அடைந்தார். இதன் மூலம் அவர் 6ம் இடத்தை பிடித்தார். கிராண்ட்மாஸ்டர் ஹிகாரு நகமுரா நான்காவது இடத்தைப் பிடித்தார், அர்ஜுனை வீழ்த்திய ஃபேபியானோ கருவானா ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.

மேலும் படிக்க : ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் செஸ் : அர்ஜுன் எரிகைசி சாதனை

7ம் இடத்தில் பிரக்​ஞானந்தா:

மற்​றொரு இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்​ஞானந்தா 1.5-0.5 என்ற கணக்​கில் அமெரிக்​கா​வின் சோ வெஸ்​லியை வீழ்த்தி 7வது இடம் பிடித்​தார்(Praggnanandhaa 7th Ranking). முதலிடம் பிடித்த அமெரிக்காவின் லெவன் அரோனியனுக்கு இந்​திய மதிப்​பில் 1.72 கோடி பரிசாக கிடைத்துள்ளது. அர்​ஜுன் எரி​கைசிக்கு ரூ.34.50 லட்​ச​மும், பிரக்​ஞானந்​தாவுக்கு ரூ.25.88 லட்​ச​மும் வழங்​கப்​பட்​டது.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in