Chess : ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் செஸ் : அர்ஜுன் எரிகைசி சாதனை

Arjun Erigaisi in Freestyle Grand Slam Chess Semi Final : ஃப்​ரீஸ்​டைல் கிராண்ட் ஸ்லாம் செஸ் போட்​டி​யில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்​ஜுன் எரி​கைசி அரை இறு​திக்கு முன்​னேறி அசத்தி உள்ளார்.
Indian Grand Master Arjun Erigaisi in Freestyle Grand Slam Tour Chess Semi Final 2025
Indian Grand Master Arjun Erigaisi in Freestyle Grand Slam Tour Chess Semi Final 2025https://x.com/ArjunErigaisi/media?lang=en
1 min read

ஃப்​ரீஸ்​டைல் கிராண்ட் ஸ்லாம் செஸ் :

Arjun Erigaisi in Freestyle Grand Slam Chess Semi Final : ஃப்​ரீஸ்​டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரின் 4வது கட்ட போட்டி அமெரிக்​கா​வின் லாஸ் வேகாஸ் நகரில் நடை​பெற்று வரு​கிறது. காலிறுதி சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான அர்​​ஜுன் எரி​கைசி, உஸ்​பெகிஸ்​தானின் நோடிர்​பெக் அப்​துசத்​தோரோவுடன் மோதி​னார். முதல் ஆட்​டத்​தில் கருப்பு காய்​களு​டன் விளை​யாடிய அர்​​ஜுன் எரி​கைசி 64-வது நகர்த்​தலின் போது டிரா செய்​தார்.

காலிறுதியில் அர்​​ஜுன் எரி​கைசி வெற்றி :

2வது ஆட்​டத்​தில் வெள்ளை காய்​களு​டன் களமிறங்​கிய அர்​​ஜுன் எரிகைசி 69வது நகர்த்​தலின் போது வெற்​றியை தன் வசப்​படுத்​தி​னார். முடி​வில் அவர் 1.5-0.5 என்ற கணக்​கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். இதன் மூலம் ஃப்​ரீஸ்​டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரில் அரையிறு​திக்கு முன்​னேறிய முதல் இந்​திய வீரர் என்ற வரலாற்று சாதனையை​ அர்​​ஜுன் எரி​கைசி படைத்​து இருக்கிறார்.

மேலும் படிக்க : மேலும் படிக்க : கிராண்ட்ஸ்லாம் செஸ் : பிரக்ஞானந்தாவிடம் கார்ல்சன் தோல்வி

ஏமாற்றம் தந்த பிரக்​ஞானந்தா :

அதேசமயம், மற்​றொரு இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்​ஞானந்தா(Praggnanandhaa) 3 க்கு 4 என்ற கணக்​கில் அமெரிக்​கா​வின் ஃபேபி​யானோ கரு​னா​விடம் தோல்வி அடைந்​தார். இந்த தோல்​வி​யால் பட்​டம் வெல்​ல முடியாத அவர் வெளி​யேறி​னார். மற்ற காலிறுதி ஆட்​டங்​களில் அமெரிக்​கா​வின் லெவன் அரோனியன், ஹான்ஸ் மோக் நீமன் ஆகியோர் வெற்றி பெற்​றனர்.

அரையிறுதி சுற்​றில் அர்​​ஜுன் எரி​கைசி, லெவன் அரோனியனுடன் மோதுகிறார். மற்​றொரு அரை இறு​தி​யில் ஹான்​ஸ் மோக் நீமன், ஃபேபி​யானோ கரு​னாவை சந்​திக்​கிறார்​.

====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in