
ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி :
Elavenil Valarivan Wins Gold in Asia Shooting Championship 2025 : ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் கஜகஸ்தானில் உள்ள ஷிம்கென்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு(10m Air Pistol) போட்டியில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் பங்கேற்றார்.
தங்கம் வென்றார் இளவெனில் வாலறிவன் :
இறுதிப் போட்டியில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட்டார் இளவெனில் வாலறிவன்(Elavenil Valarivan). மொத்தம் 253.6 புள்ளிகளை குவித்த அவர் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
சீனாவுக்கு வெள்ளிப் பதக்கம் :
சீனாவை சேர்ந்த சின்லு பெங் 253 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். கொரியாவின் யூன்ஜி குவான் 231.2 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
இந்திய வீராங்கனைகள் அசத்தல் :
இந்தப் போட்டிகளில் பங்கேற்ற இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீராங்கனையான, மெஹூலி கோஷ், 208.9 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தை பிடித்தார்.
இரண்டு முறை ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை மனு பாக்கர்(Manu Bhaker), 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்றார்.
மேலும் படிக்க : ஆசிய கோப்பை, இந்திய அணி : கேப்டன் சூர்யகுமார், துணை கேப்டன் கில்
குழு பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கம் :
ஜூனியர் பிரிவில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் சாம்பவி ஷ்ரவன்(Asia Shooting Championship 2025 Junior), ஹிருதய ஸ்ரீ கொண்டூர், இஷா அனில் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 1896.2 புள்ளிகளை குவித்து ஆசிய சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது.
==========