கிராண்ட் ஸ்விஸ் செஸ் 2025 : வைஷாலி சாம்பியன் : தலைவர்கள் வாழ்த்து

R Vaishali Chess Player : கிராண்ட் ஸ்விஸ் செஸ் மகளிர் பிரிவு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று, கேண்டிடேட்ஸ் 2026 போட்டிக்கு தகுதி பெற்றார்.
R Vaishali Wins FIDE Grand Swiss 2025
R Vaishali Wins FIDE Grand Swiss 2025
1 min read

கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டிகள்

R Vaishali Wins FIDE Grand Swiss 2025 : உஸ்பெகிஸ்தானின் சமர்க்கண்ட் நகரில் ’பிடே’ கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டிகள் நடைபெற்றன. உலகின் முன்னணி செஸ் வீராங்கனைகள் இதில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன்

11 சுற்றுகள் முடிவில் மகளிர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் வைஷாலியும் ( 6 வெற்றி, 1 டிரா ) , ரஷ்ய வீராங்கனை கேதரினா லாக்னோவும் ( 5 வெற்றி, 6 டிரா ) 8 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தனர். இருப்பினும், டைபிரேக்கர் ஸ்கோர் அதிகமாக பெற்றிருந்த காரணத்தால், வைஷாலி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இரண்டாவது முறை பட்டம் வென்று அசத்தினார் வைஷாலி,

மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கு தகுதி

இதையடுத்து, 2026ல் நடைபெறவுள்ள மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் பங்குபெற, வைஷாலி தகுதி பெற்றார். இதற்கு முன், ஜார்ஜியாவில் நடந்த மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக், இறுதிப் போட்டியில் ஆடிய கொனேரு ஹம்பி, ஏற்கனவே மகளிர் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் ஆட தகுதி பெற்று இருக்கின்றனர்.

கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிகளில் வெல்லும் வீராங்கனை, தற்போதைய உலக செஸ் சாம்பியனான, சீன கிராண்ட் மாஸ்டர் ஜு வென்ஜுன் உடன் மோதுவார். அதில் வெற்றி பெறுபவர், அடுத்த மகளிர் செஸ் சாம்பியனாக உருவெடுப்பார்.

மற்ற இந்திய வீராங்கனைகள் ஹரிகா துரோணவள்ளி 6.5 புள்ளிகளுடன் 14ம் இடத்தையும், வந்திகா அகர்வால் 5 புள்ளிகளுடன் 36வது இடத்தையும் பிடித்தனர்.

மேலும் படிக்க : FIDE Chess World Cup: 2025ல் இந்தியாவில் உலகக் கோப்பை செஸ் போட்டி.

வைஷாலிக்கு தலைவர்கள் வாழ்த்து

இந்தநிலையில், கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in