ICC T20 World Cup : “முதல் பந்தில் பவுண்டரி, சிக்ஸர் வேண்டாம்” : அபிஷேக் சர்மாவுக்கு சுனில் கவாஸ்கர் அடவைஸ்

ICC T20 World Cup : ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சோபிக்காமல் இருக்கும் அபிஷேக் சர்மா, முதல் பந்திலேயே அதிரடியாக விளையாட அவசரம் காட்டக் கூடாது என்று, சுனில் கவாஸ்கர் அறிவுரை கூறி இருக்கிறார்.
Sunil Gavaskar advised Abhishek Sharma, who is struggling in ICC T20 World Cup, not to rush into action on first ball
Sunil Gavaskar advised Abhishek Sharma, who is struggling in ICC T20 World Cup, not to rush into action on first ballgoogle
2 min read

ஐசிசி டி20 உலகக் கோப்பை

Sunil Gavaskar has advised Abhishek Sharma, who is struggling in the ICC T20 World Cup, not to rush into action on the first ball : ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியா தான் ஆடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று, சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

அதிரடி வீரர் அபிஷேக் சர்மா

இந்​திய அணி​யின் தொடக்க வீர​ரான அபிஷேக் சர்மா, ரன்​கள் சேர்க்க தடு​மாறி வரு​கிறார். டி20 தரவரிசை​யில் முதலிடத்​தில் இருக்​கும் அபிஷேக் சர்மா,18 மாதங்​களாக தனது அதிரடி பேட்​டிங்​கால் பெரிய தாக்​கத்தை ஏற்​படுத்​திருந்​தார்.

இதனால் உலகக் கோப்பை தொடரில் அவர் மீது அதிக எதிர்​பார்ப்பு இருந்தது.

ஐசிசி டி 20 - சோபிக்காத அபிஷேக் சர்மா

ஆனால், ஐசிசி டி20 தொடரில் 3 ஆட்​டங்​களில் டக் அவுட் ஆகி அவர் வெளியேறி​னார். அமெரிக்கா​வுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் முதல் பந்​திலேயே ஆட்​ட​மிழந்​திருந்​தார்.

நமீபியா அணிக்கு எதி​ராக காயம் காரண​மாக களமிறங்​காத நிலை​யில் பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 4 பந்​துகளை சந்​தித்த நிலை​யில் ரன் ஏதும் எடுக்​காமல் பெவிலியன் திரும்​பி​னார்.

ரன் கணக்கை தொடங்காத அபிஷேக் சர்மா

நெதர்​லாந்து அணிக்கு எதி​ராக 3 பந்​துகளை எதிர்​கொண்டு ரன் ஏதும் எடுக்​காமல் போல்​டாகி ஏமாற்​றம் அளித்தார்.

இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா இன்​னும் தனது ரன் கணக்கை தொடங்​காமலேயே உள்​ளார்.

எதிர்பார்ப்புகளால் அதிக சுமை

இதுபற்றி விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டன் சுனில் கவாஸ்​கர் “அபிஷேக் சர்மா சிறந்த பேட்​ஸ்​மேன். அவர் மீது உள்ள எதிர்​பார்ப்​பு​கள் அதிக சுமை​யைக் கூட்​டி​யுள்​ளது.

களத்தில் அதிக நேரம் செலவிட வேண்டும்

அமெரிக்கா​வுக்கு எதிராக அவர் நன்​றாக விளை​யாடி இருந்​தால் உலகக் கோப்பை தொடரே வேறு மாதிரி​யாக இருந்​திருக்​கும். தற்போது அபிஷேக் சர்மா மீது அழுத்​தம் ஏற்​பட்​டுள்​ளது. அபிஷேக் சர்மா களத்​தில் நேரத்தை செல​விட வேண்​டும்.

மேலும் படிக்க : டி-20 உலகக் கோப்பை : நெதர்லாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி !

முதல் பந்தில் அதிரடி வேண்டாம்

தனது இன்னிங்​ஸின் முதல் பந்​தில் பவுண்​டரி அல்​லது சிக்​ஸர் அடிக்க முயற்​சிக்​கக் கூடாது. பெரிய ஷாட்​டு​கள் வந்​தால் பரவா​யில்​லை.

ஆனால் அவர், பெரிய ஷாட்​களை மேற்​கொள்​வதற்கு தனக்கு தானே கட்​டாயப்​படுத்​திக் கொள்ளக்​கூ​டாது.

மெதுவாக விளையாடி அதிரடிக்கு மாற வேண்டும்

முதலில் ஒரு ரன் எடுக்க வேண்​டும். நான்கு பந்​துகளில் ரன்கள் எதும் எடுக்​க​வில்லை என்​றாலும் கவலை​யில்​லை.

அதை அவர், பின்​னர் சரிசெய்து கொள்ளலாம். தொடக்​கத்​தில் அபிஷேக் சர்மா சற்று புத்​தி​சாலித்​தன​மாக விளை​யாட வேண்​டும்.

பொறுமையே சிறப்பான தொடக்கம்

முதல் ஒரு ஓவர் அல்​லது 2 ஓவர்​களில் களத்​தில் நிலைபெற்ற பின்​னர் தனது இயல்​பான ஆட்​டத்தை விளையாடலாம்.

முதல் ரன் எடுத்​தாலே அனைத்​தும் நன்றாக அமை​யும்​. இவ்​வாறு கவாஸ்​கர்​ கூறி​னார்​.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in