
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி :
World Athletics Championships 2025: Sachin Yadav Fourth in Javelin Throw Final : ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆவடருக்கான ஈட்டி எறிதலில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ் ஆகியோர் தகுதி பெற்றனர்.
சச்சின் யாதவ் 4வது இடம் :
இதில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நீரஜ் சோப்ரா 8வது இடத்தைப் பிடித்து ஏமாற்றம் தந்தார்(Neeraj Chopra). அதேசமயம் சச்சின் யாதவ் 4-து இடத்தைப் பிடித்து இந்தியாவின் புதிய நட்சத்திரமாக உருவெடுத்து இருக்கிறார்.
இந்தியாவின் நம்பிக்கை சச்சின் யாதவ் :
உத்தரப் பிரதேசத்தின் கேக்ரா என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த சச்சின் யாதவ், 19 வயதில் ஈட்டி எறிதலைத் தொடங்கினார்(Sachin Yadav Biography). கிரிக்கெட் வீரராக வர வேண்டும் என்று கனவு கண்ட சச்சின் யாதவ், அண்டை வீட்டாரின் ஆலோசனைகளைக் கேட்டு ஈட்டி எறிதலில் தனது திறமையைக் காட்ட களமிறங்கினார். இது அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றி அமைத்து, இன்று இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவாக்கி இருக்கிறது.
கிரிக்கெட் வீரர்களான தோனி, ஜஸ்பிரித் பும்ராவை தனது வழிகாட்டிகளாக கொண்டவர் சச்சின் யாதவ். 6 அடி 5 அங்குல உயரமும் இயல்பான தடகளத் திறனும் ஈட்டி எறிதல் அரங்கில் அவரை மிளிரச் செய்துள்ளது.
தேசிய அளவில் சாதனையாளர் :
தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளை குவித்துள்ள சச்சின் யாதவ், 2025 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றார். தற்போது அவர் உலகத் தரவரிசையில் 17வது இடத்தில் இருக்கும் சச்சின் யாதவ், 38வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் 84.39 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும் வென்றார். நீரஜ் சோப்ரா கிளாசிக் போட்டியில், 82.33 மீட்டர் தூரம் எறிந்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.
தனிப்பட்ட சிறந்த சாதனை :
உலக தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா தடுமாறிய நிலையில், சச்சின் யாதவ் தனது முதல் எறிதலில் 86.27 மீட்டர் தூரம்(Sachin Yadav Javelin Distance) ஈட்டியை வீசினார். தனது தனிப்பட்ட சிறந்த சாதனையை எட்டி அனைவரையும் அவர் கவர்ந்தார். இது உலக ஈட்டி எறிதல் அரங்கில் சச்சின் யாதவ் தனது இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்தது.
மேலும் படிக்க : உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 : இறுதிப் போட்டியில் நீரஜ் சோப்ரா
இந்தியாவின் புதிய நம்பிக்கை :
இறுதிப் போட்டியில் அவருக்கு கிடைத்து இருக்கும் நான்காவது இடம் ஒரு அழுத்தமான பதிவு தான். இதன் மூலம் வரும் காலங்களில் இந்தியாவுக்கான பதக்க வேட்டையில் நம்பிக்கை நாயகமான உருவெடுத்து இருக்கிறார் சூர்யகுமார் யாதவ்.
===================