

Air India Ticket Freedom Sale Discount Offer 2025 : இந்தியாவில் மலிவு விலை விமான கட்டணங்கள் கொண்ட ஏர் இந்தியாவின் துணை நிறுவனம் ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’. உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் இந்த நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது. இந்த விமானங்கள் மூலம் நாள்தோறும், பல்லாயிரக் கணக்கானோர் பயணித்து வருகிறது.
பயணிகளுக்கு அதிரடி சலுகை :
இந்தநிலையில், சுதந்திர தினத்தை(Independence Day 2025) முன்னிட்டு பயணிகளுக்கு பம்பர் சலுகையை அறிவித்து இருக்கிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ். அதன்படி,
இன்று முதல் வரும் 15ம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்(Air India Flight Ticket Booking Offer), 50 லட்சம் பயணிகளுக்கு, கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். உள்நாட்டு விமான பயண கட்டணம் 1,279 ரூபாயிலும், சர்வதேச விமான பயண கட்டணம் 4,279 ரூபாயிலும் துவங்குகிறது.
2026 மார்ச் வரை புக் செய்யலாம் :
விமான பயணிகள் இந்த கட்டணச் சலுகையை பயன்படுத்தி, அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை டிக்கெட் புக்கிங் செய்து, சொந்த ஊர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பயணிக்கலாம். அதே நேரத்தில், இந்த சலுகையை பெற வேண்டுமானால் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். தள்ளுபடி கட்டண விமான டிக்கெட்டுகளை, www.airindiaexpress.com என்ற இணைய தளத்திலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மொபைல் ஆப்(Air India App) வழியாகவும் முன்பதிவு செய்யலாம்.
இது தவிர ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் பிரத்யேக வாடிக்கையாளர்களுக்கென உணவு, சீட் தேர்வு, கூடுதல் பேக்கேஜ் கட்டணம் போன்றவற்றில் 20 சதவீதம் சலுகை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழாக் காலங்களில் சூப்பர் ஆஃபர் :
தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல், ஓணம், சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்த்தி(Vinayagar Chaturthi) உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் இந்த மலிவு விலை விமான கட்டண சலுகை பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் படிக்க : விமான டிக்கெட் முன்பதிவு வீழ்ச்சி : விலையை குறைத்த ஏர் இந்தியா
தினமும் 500+ விமான சேவைகள் :
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்(Air India Express), 116 விமானங்களுடன், நாளொன்றுக்கு 500க்கும் மேற்பட்ட விமான சேவைகளை, 38 இந்திய நகரங்கள் மற்றும் 17 சர்வதேச நாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா பகுதிகளுக்கு விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அளித்து வருகிறது.
===============