வீடுகளுக்கு 125 யூனிட் இலவச மின்சாரம் : நிதிஷ்குமார் அதிரடி

125 Units Electricity Free in Bihar : பீகார் மாநிலத்தில் வீடுகளுக்கு 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று, முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்து இருக்கிறார்.
Bihar CM Nitish Kumar Announced 125 Units Free Electricity in Bihar
Bihar CM Nitish Kumar Announced 125 Units Free Electricityhttps://x.com/NitishKumar
1 min read

பீகார் சட்டமன்ற தேர்தல் :

125 Units Electricity Free in Bihar : பீகார் சட்டப்பேரவை அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் களமிறங்கி இருக்கின்றன. நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம்-காங்கிரஸ் கூட்டணி மற்றும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுவராஜ் கட்சி என மும்முனப் போட்டி நிலவுகிறது. மீண்டும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வரும் நிதிஷ்குமார், வீடுகளுக்கு 125 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறார்.

125 யூனிட் மின்சாரம் இலவசம் :

தனது தலைமையிலான அரசு “எல்லோருக்கும் மலிவான விலையில் மின்சாரம் வழங்கி வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள வீட்டு பயன்பாட்டுக்கான மின் சேவையை பெற்று வரும் மக்கள், 125 யூனிட் வரையிலான மின் பயன்பாட்டுக்கு கட்டணம்(125 Units Free Electricity) செலுத்த வேண்டியதில்லை. இதன் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 1.67 கோடி குடும்பங்கள் பயன்பெறும். ஜூலை மாத பயன்பாட்டில் இருந்தே இந்த சலுகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மேலும் படிக்க : நாடாளுமன்ற கேன்டினில் ஆரோக்கிய உணவுகள் : சிறுதானிய இட்லி, தோசை

சூரிய ஒளி மின்சாரம் :

இதற்கு ஏற்ற வகையில் அடுத்த மூன்று ஆண்டுகளில் மக்களின் ஒப்புதலுடன் சூரிய ஒளி மின்சார அமைப்பினை வீட்டின் மேற்கூரை அல்லது அவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்தில் பொருத்தப்படும். குதிர் ஜோதி திட்டத்தின் கீழ் இது செயல்படும். எளிய பின்னணி கொண்ட குடும்பங்களுக்கு மட்டும் இந்த திட்டத்தின் கீழ் இதற்கான முழு தொகையையும் மாநில அரசு ஏற்கும். மற்றவர்களுக்கு அரசின் ஆதரவு இருக்கும்” என நிதிஷ் குமார் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.

===

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in