
நாடாளுமன்ற உணவகம் :
Indian Parliament Canteen Foods Menu 2025 : டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்ற வளாகத்தில் உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு வகையான உணவுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. கூட்டத்தொடர் நடைபெறும் போது இங்கு உணவு சாப்பிட பிரதமர் நரேந்திர மோடி(PM Modi) முதல் உறுப்பினர்கள் வரை அனைவரும் ஆர்வம் காட்டுவர்.
சத்தான உணவு வகைகள் சேர்ப்பு :
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் வேண்டுகோளின்படி, சுவையை தியாகம் செய்யாமல் உடல் ஆரோக்கியத்தை காக்கும் வகையில் புதிய உணவு வகைகள் உணவகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. சுவையான கறிகள் மற்றும் விரிவான தாளிகளுடன்(Parliament Canteen Foods) சிறுதானியங்களை அடிப்படையாகக் கொண்ட உணவுகள், நார்ச்சத்து நிறைந்த சாலடுகள் மற்றும் புரதம் நிறைந்த சூப்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
உறுப்பினர்களின் உடல் நலத்திற்கு முன்னுரிமை :
ஒவ்வொரு உணவும் குறைவான கார்போஹைட்ரேட், சோடியம் மற்றும் கலோரிகளைக் கொண்டதாக இருக்கும். அதேசமயம் அத்தியாவசிய ஊட்டச்சத்து நிறைந்ததாகவும்(Nutritious Foods) இருக்கும் வகையில் கவனமாக திட்டமிட்டு தயாரிக்கப்படும். ராகி சிறுதானிய இட்லி, சோள உப்புமா, பாசிப்பருப்பு தோசை மற்றும் காய்கறிகளுடன் கூடிய வறுத்த மீன்(Fried Fish) உள்ளிட்ட ஊட்டச்சத்தான உணவுகள் தயாரித்து விற்பனை செய்யப்படும்.
சிறுதானிய உணவு வகைகள் :
பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக(International Year of Millets) ஐ.நா.சபை அறிவித்தது. இதையடுத்து சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதை பின்பற்றும் வகையில் நாடாளுமன்ற உணவகத்திலும்(Parliament Canteen) ஆரோக்கிய உணவுகள் வழங்கப்பட உள்ளன.
21ம் தேதி முதல் நாடாளுமன்ற கூட்டம் :
வரும் 21ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. அப்போது, மேலே குறிபிட்ட சத்தான சிறுதானிய உணவு வகைகள் விற்பனை செய்யப்படும். எம்பிக்கள் தெரிவிக்கும் யோசனையின் அடிப்படையில் தேவைப்படும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : ஜூலை 21ல் தொடக்கம்
=====