”லாலுவின் குடும்ப அரசியல்” : சம்மட்டி அடி கொடுத்த பிகார் மக்கள்

Bihar Assembly Election Results 2025 : கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் கொடுத்தும் லாலுவின் குடும்ப அரசியலை ஒதுக்கி தள்ளி, தெளிவான தீர்ப்பினை பிகார் மக்கள் வழங்கி இருக்கிறார்கள்.
Bihar Assembly Election Results 2025 people of Bihar have given clear verdict, putting aside Lalu's family politics
Bihar Assembly Election Results 2025 people of Bihar have given clear verdict, putting aside Lalu's family politicsGoogle
1 min read

அபார வெற்றி பெறும் NDA

Bihar Assembly Election Results 2025 : பிகார் சட்டமன்ற தேர்தலில் அனைத்து கருத்துக் கணிப்புகளையும் முறியடித்து தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. 190 தொகுதிகளுக்கு மேல் இந்தக் கூட்டணி வெல்ல வாய்ப்பு இருக்கிறது.

படுதோல்வியில் ‘மகாகத்பந்தன்’

அதேசமயம், ஆர்ஜேடி - காங்கிரஸ் அங்கம் வகித்த மகாகத்பந்தன் கூட்டணி 40 தொகுதிகளுக்கும் குறைவான இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்பு இருக்கிறது. ஒற்றுமையின்மை, சிறுபான்மையின மக்களின் வாக்குகள் பிரிக்கப்பட்டது இந்தக் கூட்டணிக்கு பலத்த சரிவை ஏற்படுத்தி இருக்கிறது.

வளர்ச்சியால் வென்ற NDA

முன்னணி நிலவரங்களை பார்க்கும் போது, பீகாரில் மீண்டும் தேசிய ஜநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. நிதிஷ்குமார் அரசு மக்களுக்கு வழங்கிய பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ததே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

குடும்ப அரசியலால் தோற்ற RJD

அதேநேரத்தில் ஆர்ஜேடி கட்சியின் படுதோல்விக்கு குடும்ப அரசியலே காரணம் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு, பிகார் மக்கள் ஆட்சி அதிகாரத்தை வழங்கியபோது லாலு பிரசாத் தனது மனைவிக்கு முதல்வர் பதவியை வழங்கினார். மகளுக்கு எம்.பி., பதவி வழங்கினார். இரண்டு மகன்களுக்கும் துணை முதல்வர் பதவி வழங்கினார். அவரது உறவினர்கள் பலர், பல்வேறு பொறுப்புகளில் மாநிலத்தின் வளர்ச்சியை படுகுழியில் தள்ளினர்.

லாலு குடும்பத்தினர் ஆதிக்கம்

அரசு அலுவலகங்களில் எங்கு பார்த்தாலும் லாலு பிரசாத்தின் சமூகத்தை சேர்ந்தவர்களே ஆதிகம் செலுத்தினர். இதில் மக்கள் அடைந்த அதிருப்தி தான். இதுவே நிதிஷ்குமார் 2055ல் அரியணை ஏற காரணமாக இருந்தது. 20 ஆண்டுகள் ஆனாலும் அதை மக்கள் மறக்க தயாராக இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. அதன் காரணமாகவே லாலு கட்சியையும், கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் மக்கள் சரியான பாடம் புகட்டி இருக்கிறார்கள்.

வாக்குறுதிகளை ஏற்க மறுத்த மக்கள்

ஏற்கனவே குடும்ப அரசியல் மூலம் முன்னணிக்கு வந்த ராகுல் காந்தியுடன் தேஜஸ்வி கைகோர்த்தது, அவரது அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. லாலுவின் இன்னொரு மகன் தேஜ் பிரதாப் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியல் செய்து வருகிறார்.

வீட்டுக்கு ஒரு அரசு வேலை, பெண்களுக்கு ஆண்டு தோறும் 30 ஆயிரம் என சலுகைகளை தேஜஸ்வி வாரி வழங்குவதாக அறிவித்தும், அது மக்களிடம் எடுபடவில்லை. மக்களும் சரியான தீர்ப்பினை வழங்கி, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில் அமர்த்து இருக்கிறார்கள்.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in