

பெண்கள் வங்கிக்கணக்கில் 10 ஆயிரம் வரவு
Bihar Election Results 2025 : அந்த வரிசையில், அனைத்து வீடுகளுக்கும் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டது ஆட்சியைப் பிடிக்க பக்கபலமாக இருந்துள்ளது என்றும் கூறலாம். அதுமட்டுமின்றி பெண்களை தொழில் முனைவோர் ஆக்குவதற்கு 1.3 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்கில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டது.
தேஜ கூட்டணி முன்னிலைக்கு பெண்கள்...
இது வழக்கத்தை விட பெண்களை தொழில் முனைவோர் ஆக்குவதற்கு போடப்பட்ட முயற்சி, தேஜ கூட்டணிக்கு பெண்களின் ஓட்டுகளை அதிகரிக்க செய்துள்ளது என்ற தேர்தலில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக ஓட்டளித்தனர். மொத்த ஓட்டுப்பதிவு 66.91% ஆக இருந்த நிலையில், பெண்களின் ஓட்டுப்பதிவு 71.6% ஆக உயர்ந்தது. இது தேஜ கூட்டணி தற்போது முன்னிலை வகிக்க முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி
தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றால் மாதம் ரூ.2500 தருவதாக வாக்குறுதி மற்றும் தேர்தல் விளம்பரங்களாக மக்கள் முன் பலவகை வாக்குறுதிகளை முன்வைத்தார். இனிவரப்போவரை நம்புவதற்குப் பதிலாக என்று சுதாரித்த பெண்கள் நிதிஷ் குமார் மீதான தங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தினர். 1.2 கோடி மூத்த குடிமக்களுக்கான முதியோர் ஓய்வூதியத்தை நிதிஷ் குமார் ரூ.400 லிருந்து ரூ.1,100 ஆக உயர்த்தியது ஆட்சியை மீண்டும் பிடிப்பதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
பெரிய சக்தியாக கருதும் மூத்த குடிமக்கள்
மூத்த குடிமக்கள் இதை நிதிஷ் குமாரிடமிருந்து கிடைத்த பெரிய பரிசாகக் கருதிய நிலையில், இதனால் மீண்டும் நிதிஷ் குமார், பாஜ தலைமையிலான தேஜ கூட்டணி ஆட்சியை அமைக்க இருக்கிறது. பீஹார் மக்கள் அமோக வெற்றியை வழங்கி உள்ளனர். இந்த வெற்றி கொண்டாடத்தில் தேஜ கூட்டணி தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை, தொடர்ந்து தங்களது கொண்டாடங்களை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பறிமாறி வருகின்றனர்.