
பாஜகவின் நிர்வாகக் கொள்கை :
H Raja on TVK Vijay 2nd Madurai Manadu : எச். ராஜா அவர்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாஜகவின் ஆட்சி நிர்வாகக் கொள்கை என்பது அந்த்யோதயா அதாவது கடையணையும் கடைத்தேற்றல் எளிதில் புரியும் வகையில் சொல்ல வேண்டுமானால் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது.
நாட்டு மக்களுக்கு எண்ணற்ற திட்டங்கள் :
அதனால் தான் வீடில்லாத ஏழைகளுக்கு வீடு, கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு கழிப்பறை, கண்ணீரில் இருந்தும் காசநோயில் இருந்தும் தாய்மார்களுக்கு விடுதலை அளிக்க புகையில்லா சமையலறை என்கிற முழக்கத்தோடு விளிம்பு நிலை மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பு, தாய் - சேய் நலன் காக்க கருவுற்ற தாய்மார்களுக்கு இலவச தடுப்பூசி, அனைவருக்கும் இலவச மருத்துவ காப்பீடு, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் கடைகள் மூலம் தரமான உணவுப் பொருள்க.
கொரோனா தொற்று காலத்தில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி, அனைத்து வீடுகளுக்கும் தரமான குடிநீர் வழங்க ஜல் ஜீவன் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000/- கெளரவ நிதி(PM Kisan Nidhi), பயிர் பாதுகாப்பீட்டுத் திட்டம், அனைவரும் தொழில் தொடங்க முத்ரா வங்கி கடன் திட்டம், அனைவருக்கும் வங்கிக் கணக்கு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் என எண்ணற்ற பல திட்டங்களை பாஜக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
விஜய் நடிக்கிறார் - மோடி செயல்படுத்துகிறார் :
ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என மெர்சல் திரைப்படத்தில் வசனம் பேசி நடித்தார் திரு.ஜோஸப் விஜய்(Joseph Vijay). ஆனால் பிரதமர் திரு.நரேந்திர மோடி(PM Modi) அவர்களோ ஏழைகள் அனைவருக்கும் ஐந்து லட்சம் ரூபாய்க்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்கி வருகிறார்.
5 ரூபாய் வசனம், ஆனால் நடைமுறையில்? :
ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்று திரைப்படத்தில் வசனம் பேசிய திரு.ஜோஸப் விஜய்(TVK Vijay) அவர்கள் தனது ஒவ்வொரு திரைப்படத்தின் முதல் நாளும் திரையரங்க டிக்கெட் விலை 1000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதை அமைதியாக வேடிக்கை பார்க்கிறார். இதைக் கண்டித்து என்றைக்காவது கேள்வி எழுப்பி இருக்கிறாரா?
ரசிகர்கள் மீது அக்கறை இல்லாதவர் :
திரு.ஜோஸப் விஜய் அவர்கள் தனது ரசிகர்கள் வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தை தனது திரைப்படங்களுக்கு டிக்கெட் எடுக்கவும், கட் அவுட் வைக்கவும் செலவு செய்து கடைசி வரை கடைநிலையிலேயே தனது ரசிகர்கள் இருக்க வேண்டும் என்பதையே விரும்புகிறார்.
மேலும் படிக்க : ’21ம் நூற்றாண்டு அரசியலுக்கு வாங்க விஜய்’ : அண்ணாமலை பதிலடி
கொள்கையற்றவர் விஜய் :
பாரதிய ஜனதா கட்சி உயர்ந்த கொள்கையோடு செயல்படுதால் தான் உயர்ந்த கொள்கையற்ற திரு.ஜோஸப் விஜய் அவர்கள் பாஜக தான் எனது கொள்கை எதிரி என சொல்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது” இவ்வாறு எச். ராஜா தெரிவித்துக் கொண்டுள்ளார்.
=======