
பாஜகவை விமர்சித்த விஜய் :
Annamalai on TVK Vijay 2nd Madurai Manadu: மதுரை தவெக மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், பாஜகவை கடுமையாக விமர்சித்து இருந்தார். தவெகவின் கொள்கை எதிரி பாஜக என்றும் அவர் குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சுக்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
உங்கள் பலம் என்ன விஜய் :
இந்தநிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை(Annamalai), “ நாங்கள் சிந்தாந்தத்த ரீதியாக நேர் எதிராக இருக்கிறோம். மற்றவரின் பலவீனம் குறித்து பேசிய விஜய், தனது பலம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.
பழைய பஞ்சாங்கத்தை பேசாதீங்க :
பழைய பஞ்சாங்கத்தையே விஜய் பேசுகிறார். எனவே, பழங்கதைகளை பேசாமல் 21ம் நூற்றாண்டு அரசியலுக்கு தவெக தலைவர் விஜய்(TVK Leader Vijay) வர வேண்டும். கூட்டமாக கூடுவோரை வாக்குகளாக மாற்ற சித்தாந்தம் கட்டாயம்.
ஆக்கப்பூர்வமான கருத்து இருக்கா? :
விஜய் தன் மீது நம்பிக்கை வைத்து பேசினால் தான் அவரை தேடி மற்ற கட்சித் தலைவர்கள் வருவார்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்று கூறும் தமிழக வெற்றிக் கழகம்(Tamilaga Vettri Kazhagam) ஆக்கபூர்வமான என்ன கருத்தை முன் வைத்துள்ளது.
பாஜக வலிமை வாய்ந்த கட்சி :
பொதுமக்கள் பாஜகவை சக்தி வாய்ந்த கட்சியாக பார்த்து வருகின்றனர். தமிழகத்தில் 18 சதவீதம் பேர் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர்(BJP Tamil Nadu). திமுக கூட்டணியினருக்கு எதைப் பார்த்தாலும் பயம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கும் வழங்கப்படாத நிதி தமிழகத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரசால் என்ன பயன்? :
காங்கிரஸ் கட்சியில் தமிழகத்துக்கு என்ன பெருமை கிடைத்தது. தற்போது, மத்திய பாஜக ஆட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதியாக(CP Radhakrishnan Vice President) வர உள்ளார். கமல்ஹாசனுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்த்தால் பயம்.
மீனவராக நடித்தால் போதுமா? :
விஜய் படங்களில் மீனவராக நடித்துள்ளார். அப்போதெல்லாம் கச்சத் தீவு விவகாரம் குறித்து பேசவில்லை. இது இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தமாகும். இலங்கை கடற்படை கைது செய்துள்ள தமிழக மீனவர்களை மத்திய அரசு மீட்டது, நடுக்கடலில் அவர்கள் மீதான துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது. இதெல்லாம் விஜய்க்கு தெரியாது” இவ்வாறு அண்ணாமலை பேட்டியளித்தார்.
மேலும் படிக்க : ”முகவரி இல்லாத கடிதம்” : விஜய்க்கு கமல்ஹாசன் சவுக்கடி