

வருமான வரி தாக்கல் அக். 31
CBDT Income Tax ITR Filing Due Date Deadline Extension in Tamil : ஆண்டு தோறும் வருமான வரி செலுத்துவோர், மத்திய அரசு குறிப்பிடும் காலத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது வழக்கம். அந்த வகையில், 2025-26ம் ஆண்டுக்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டு இருந்தது.
இயற்கை சீற்றம் - நீதிமன்றங்கள் உத்தரவு
வடமாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் தேவை என்று, இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப், ஹரியானா மாநில உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. அதன் அடிப்படையில் காலக்கெடுவை நீட்டிக்குமாறு உயர் நீதிமன்றங்களும் அறிவுறுத்தி இருந்தன.
காலக்கெடு டிசம்பர் 10 வரை நீட்டிப்பு
இதையடுத்து, வருமான வரிக் கணக்கு மற்றும் வருமான வரி தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அக்டோபர் 31ல் இருந்து டிசம்பர் 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : IT Return: வருமான வரி கணக்கு இன்று கடைசி நாள் 6 கோடி பேர் தாக்கல்
வருமான வரி தணிக்கை அறிக்கைகளை நவம்பர் 10ஆம் தேதி வரை தாக்கல்(Income Tax Return Due Date) செய்யலாம் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
====