
வருமான வரி கணக்கு தாக்கல் :
IT Return Filing Last Date 2025 in India : வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. எனவே, 2025-26-ம் நிதியாண்டுக்கு வருமான வரி(Income Tax) கணக்குகளை தாக்கல் செய்யும் பணியில் வரி செலுத்துவோர் முழுவீச்சில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதுவரை 6 கோடிக்கும் அதிகமான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளாத வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் அவகாசம் வழங்கப்படுமா?
வரி கணக்கை தாக்கல்(IT Return Filing Extension) செய்ய கூடுதல் அவகாசம் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் நிலையில், கடைசி நேர நெருக்கடிகளை தவிர்க்க முன்கூட்டியே வரி தாக்கல் செய்வதன் முக்கியத்துவத்தை தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
வரி செலுத்துவோர் கோரிக்கை :
போர்ட்டல் செயல்பாட்டில் மந்தம், படிவங்களை பதிவிறக்குவதில் சிக்கல், வடகிழக்கு மாநிலங்களி்ல் பெய்த கனமழை ஆகியவற்றால் கெடு விதிக்கப்பட்ட செப்டம்பர் 15ம் தேதிக்குள்(IT Return Filling Last Date 2025) வரி தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆண்டு தகவல் அறிக்கை (AIS), படிவம் 26AS மற்றும் வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம் (TIS) போன்ற முக்கிய தளங்கள் அதிகப்படியான பயனர்கள் காரணமாக செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. எனவே, வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31 வரை(IT Return Filing Extension Date) நீட்டிக்க வேண்டும் என்று இந்திய வரி விதிப்பு அட்வகேட்ஸ் அசோசியேசன் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.
மேலும் படிக்க : Sovereign Gold Bonds: 5 ஆண்டுகளில் 108% லாபம் : மக்கள் வரவேற்பு
யாருக்கு வருமான வரி வரும்? :
ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மேல் இருப்பவர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்கள் வரி செலுத்த தேவை இல்லை. அடுத்த நிதி ஆண்டு முதல் ஆண்டு ரூ12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை.
===========