செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி: 9 மாதங்களாக சாதனை

GST Collection September 2025 in Tamil : செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வரி, ரூ.1.89 லட்சம் கோடியாக வசூலாகி இருக்கிறது.
GST Collection September 2025 State Wise in Tamil
GST Collection September 2025 State Wise in Tamil
1 min read

ஜிஎஸ்டி வரி குறைப்பு எதிரொலி :

GST Collection September 2025 in Tamil : ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று அதற்கு முந்தைய மாதத்தில் வசூலான ஜிஎஸ்டி தொகை குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இதனிடையே ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள்(GST Reforms) கடந்த (செப்டம்பர்) மாதம் 22ம் தேதி முதல் அமலானது. ஜிஎஸ்டியில் இருந்த 4 வரி அடுக்குகள் தற்போது 2 அடுக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்துள்ளது.

செப்டம்பர் வசூல் ரூ.1.89 லட்சம் கோடி :

இந்நிலையில் செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி வசூல் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.1.89 லட்சம் கோடி(September Month GST Collection 2025) வசூலாகி உள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான தொகையை விட 9.1 சதவீதம் அதிகம் ஆகும்.

9 மாதங்களாக வசூலில் சாதனை :

கடந்த 9 மாதங்களாக ஜிஎஸ்டி வசூல்(GST Collection) ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மட்டும் ரூ.10.04 லட்சம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது.

உள்நாட்டு வருவாய் 6.8% அதிகரிப்பு :

2024 செப்டம்பரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.73 லட்சம் கோடியாக இருந்தது. மொத்த வரி வருவாயில் உள்நாட்டு ஜிஎஸ்டி வருவாய் 6.8% அதிகரித்து ரூ.1.35 லட்சம் கோடியாக உள்ளது. இறக்குமதிப் பொருள்கள் மீதான வரி 15.6% அதிகரித்து ரூ.52,492 கோடியாக உயர்ந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. கூடுதலாகச் செலுத்தப்பட்டு, திருப்பி அளிக்கப்பட்ட ஜிஎஸ்டி தொகை ரூ.28,657 கோடி என்று அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களில் ஜிஎஸ்டி வசூல்(GST Collection 2025 Month Wise) :

ஆகஸ்ட் மாதம் - ரூ.1.86 லட்சம் கோடி

ஜூலை மாதம் - 1.96 லட்சம் கோடி

ஜூன் மாதம் - ரூ.1.84 லட்சம் கோடி

மே மாதம் - ரூ.2.01 லட்சம் கோடி

ஏப்ரல் மாதம் - ரூ.2.36 லட்சம் கோடி

மேலும் படிக்க : GST: ஆகஸ்டு வசூல் ரூ.1.86 லட்சம் கோடி : தமிழகத்தில் ரு.11,057 கோடி

மார்ச் மாதம் - ரூ.1.96 லட்சம் கோடி

பிப்ரவரி மாதம் - ரூ.1.84 லட்சம் கோடி

ஜனவரி மாதம் - ரூ.1.96 லட்சம் கோடி

===================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in