GST: ஆகஸ்டு வசூல் ரூ.1.86 லட்சம் கோடி : தமிழகத்தில் ரு.11,057 கோடி

GST Tax Collection Month Of August 2025 in India : கடந்த ஆகஸ்ட் மாதம் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.86 லட்சம் கோடி வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
GST Tax Collection Month Of August 2025 in India & Tamil Nadu
GST Tax Collection Month Of August 2025 in India & Tamil Nadu
1 min read

GST Tax Collection Month Of August 2025 in India : நாட்டின் முக்கிய வரி அமைப்பாக விளங்குவது ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியாகும். 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது(GST Tax Implementation Date). பல்வேறு முறைமுக வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே வரி விதிப்பு கொண்டு வரப்பட்டது. அதன்படி, ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிறது.

ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு :

மத்திய அரசின் தரவுகளின்படி ஜிஎஸ்டி வரி வசூல் மாதம் தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முன் எப்போதும் இல்லாத அளவு ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் கோடி அளவுக்கு ஜிஎஸ்டி வசூலாகி சாதனை(GST Collection April 2025) படைத்தது. மே மாதம் 2 லட்சத்து ஆயிரம் கோடி ரூபாய் வசூலானது.

ஆகஸ்டு ஜிஎஸ்டி வசூல் ரூ.1.86 லட்சம் கோடி :

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று, கடந்த மாதம் வசூலாக தொகை தொடர்பான விவரங்களை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.86 லட்சம் கோடியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது(GST Collection August 2025). கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 1.74 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி இருந்தது. அந்தவகையில் இந்த ஆண்டு 6.5 சதவீத அதிகரித்து இருக்கிறது.

தமிழகத்தில் ரூ.11,057 கோடி வசூல்

ஜிஎஸ்டி வசூலில் மகாராஷ்டிரம், தமிழகம், கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் முன்னிலை வகிக்கின்றன. தமிழகத்தில் ஆகஸ்டு மாத ஜிஎஸ்டி வசூல், 11,057 கோடி ரூபாயாக உள்ளது(GST Collection April 2025 in Tamil Nadu). சென்ற ஆண்டு ஆகஸ்டு மாத வசூல் 10,187 கோடியாக இருந்தது. இதன் மூலம் ஜிஎஸ்டி வசூல் 9 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

மேலும் படிக்க : GST : ஜூலையில் ஜிஎஸ்டி வசூல் 1.96 லட்சம் கோடி : 7.5 சதவீதம் அதிகம்

கடுமையான கண்காணிப்பு, வசூல் உயர்வு :

உள்நாட்டு சந்தை விரிவடைதல், வணிகம் உற்பத்தி துறைகளின் வளர்ச்சி, வரி கட்டமைப்பில் கடுமையான கண்காணிப்பு போன்ற காரணங்களால் ஜிஎஸ்டி வசூல்(GST Collection) அதிகரித்து இருப்பதாக, நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, வரும் மாதங்களில் இந்த வசூல் 2 லட்சம் கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே, வரி குறைப்பு பற்றி ஆராய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in