Delhi Blast: தீவிரவாத கும்பலுடன் தொடர்பு: உமர் முகமது, புதிய தகவல்

Delhi Car Blast Today Update in Tamil : டெல்லி கார் வெடிப்பில் முளையாக செயல்பட்ட டாக்டர் உமர் முகமது, தீவிரவாத குழுக்களுடன் தொடர்பில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
Umar Mohammed, who was mastermind behind Delhi car blast, was in contact with terrorist groups
Umar Mohammed, who was mastermind behind Delhi car blast, was in contact with terrorist groupsGoogle
2 min read

டெல்லி கார் வெடிப்பு

Delhi Car Blast Today Update in Tamil : டெல்லியில் செங்கோட்டை அருகே சிக்னலில் நின்றிருந்த கார் திடீரென வெடித்து சிதறியதில், அருகில் நின்றிருந்த வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. இந்தச் சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். பலத்த காயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

NIA - விசாரணை தொடக்கம்

வழக்கு விசாரணை சிபிஐயிடம் இருந்து, தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விட்டது. என்ஐஏ அதிகாரிகளும் தங்களின் முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். கார் வெடிப்பு நிகழ்ந்த இடத்தில், தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்தப் பகுதியில் முழுமையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கிறது.

சூத்திரதாரி உமர் முகமது

இந் நிலையில், இந்த கார் வெடிப்பு சம்பவத்தின்(Delhi Car Blast Tamil) சூத்திரதாரியும், சந்தேக நபருமான டாக்டர் உமர் நபி பற்றி புதுப்புது தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்கொலை் தாக்குதலா?

கடந்த வாரம், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தர பிரதேசத்தில் போலீசாரின் கூட்டு நடவடிக்கையில் மருத்துவர்கள் உள்பட 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலுடன் தொடர்பில் இருந்தவர் என்று சந்தேகிக்கப்படும் உமர் முகமது தான் டில்லியில் வெடித்துச் சிதறிய வெள்ளை நிற காரை (கார் பதிவு எண் HR 26 CE 7674) ஓட்டி வந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

சதிச் செயலில் மூன்று மருத்துவர்கள்

உமர் காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்தவர். 1989ம் ஆண்டு பிறந்த இவர், பரிதாபாத்தில் உள்ள அல்பலா (Alfalah) மருத்துவக் கல்லூரியில் பணியாற்றியவர். அவருடன் அடில் அகமது ராதர், முஜாம்மில் ஷகீல் இருவரும் பணிபுரிந்துள்ளனர். இந்த 3 பேரும் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டர்களாக பணியாற்றி இருக்கின்றனர்.

இந்த இரு மருத்துவர்கள்( அடில் அகமது ராதர், முஜாம்மில் ஷகீல்) தான் 2,900 கிலோ அம்மோனியம் நைட்ரேட் மற்றும் வெடி பொருட்களை சேகரித்து வைத்திருந்ததாக சிக்கியவர்கள். உமர் முகமது எங்கே சென்றார் என்று தேடப்பட்டு வந்த நிலையில் தான், கார் வெடிப்பை நிகழ்த்திய நபர் அவர் தான் என்று புலனாய்வு அமைப்பினர் சந்தேகிக்கின்றனர்.

White Colour Terrorism :

மூன்று பேரும் ஒன்றாகவே இருந்து, ’White Colour Terrorism’ என்று கூறப்படுவது போல தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் ஸ்லீப்பர் செல் ஆக இருந்ததுள்ளனர். கல்வி, சமூகத்தில் அந்தஸ்து மிக்க உத்தியோகம் மற்றும் தன்னார்வ (charitable) செயல்கள் மூலம் நிதியை திரட்டி உள்ளனர் என்பது விசாரணை அமைப்புகள் மூலம் உறுதிப் படுத்தப்பட்டு உள்ளது.

புல்வாமாவில் உமர் குடும்பம் :

புல்வாமாவில் வசிக்கும், உமர் குடும்பத்தினரிடம் புலனாய்வு அமைப்பினர் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். புல்வாமாவில் உள்ள வீட்டுக்கு உமர் வந்ததே இல்லை. அவரின் தாய், மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் மட்டுமே இங்கு உள்ளனர் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

குடும்பத்தினருக்கே தெரியாமல் தீவிரவாத குழுவில் இடம்பெற்று உமர் பணியாற்றி இருக்கலாம் எனத் தெரிகிறது. புலனாய்வு அமைப்புகள் அடுத்தடுத்து நடத்தி வரும் விசாரணைகள், டெல்லி கார் வெடிப்பில் மூன்று மருத்துவர்களின் பங்கினை தெளிவுபடுத்தும் எனத் தெரிகிறது.

===================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in