Special Trains: தீபாவளிக்கு 108 சிறப்பு ரயில்கள்: தமிழகத்தில் 50%

Special Train For Diwali Festival 2025 : தீபாவளி பண்டிகையை ஒட்டி, 108 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும், அவற்றில் 50 சதவீத ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Southern Railway announced 108 special trains will be operated during Diwali Festival
Southern Railway announced 108 special trains will be operated during Diwali Festival
1 min read

சிறப்பு பேருந்துகள், ரயில்கள் :

Southern Railway Announces 108 Special Trains for Diwali Festival 2025 : தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற பெரிய திருவிழாக்களின் போது, பொதுமக்கள் பண்டிகையை தங்கள் ஊர்களில் கொண்டாட அதிக ஆர்வம் காட்டுவர். எனவே, அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் இம்மாத இறுதியில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.

ரயில் நிலையங்களில் தூய்மை பணிகள்

பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பேட்டியளித்த தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மகேஷ், “காந்தி ஜெயந்தியை ஒட்டி ரயில் நிலையங்களில் மூன்று கட்டங்களாக துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளில், 28,000 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்; 8.6 டன் பிளாஸ்டிக் மற்றும் 165 டன் இரும்பு கழிவுகள் சேகரிக்கப்பட்டு, மறு சுழற்சிக்கு அனுப்பப்பட்டன.

108 சிறப்பு ரயில்கள் :

தீபாவளி பண்டிகையை(Diwali Festival 2025) முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில், மொத்தம் 108 சிறப்பு ரயில்கள் பொதுமக்களின் வசதிக்காக இயக்கப்பட உள்ளன.

தென் மாவட்டங்கள் உட்பட தமிழகத்தில் 50 சதவீதம் சிறப்பு ரயில்களும், பிற மாநிலங்களுக்கு 50 சதவீதம் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. ரயில்கள் இயக்கம் தொடர்பான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

சென்னை ஒன் செயலி - மக்கள் வரவேற்பு

சென்னை கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'சென்னை ஒன்' செயலி(Chennai One App) வாயிலாக, மின்சார ரயில்களுக்கான டிக்கெட் எடுத்து, ஒரு லட்சம் பேர் பயணித்து இருக்கிறார்கள். வேளச்சேரி மேம்பால ரயில் திட்டத்தை, மெட்ரோவுடன் இணைக்கும் பணிகளும் நடக்கின்றன. அனைத்து பணிகளும் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும்.

மேலும் படிக்க : மத்திய அரசு ஊழியர்களுக்கு ”தீபாவளி பரிசு” : அகவிலைப்படி 3% உயர்வு

ஜனவரியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம்

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடைமேடை, மேற்கூரை, பிரமாண்டான நடைபாதை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த ரயில் நிலையம்(Kilambakkam Railway Station), வரும் ஜனவரியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்” இவ்வாறு அவர் கூறினார். சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்ற தெற்கு ரயில்வேயின் வரவேற்பு, பொதுமக்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in