Earthquake : டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம் : பொதுமக்கள் அச்சம்

Delhi Earthquake Today : தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதி அடைந்தனர்.
Earthquake Hits Delhi and Suberban Areas
Earthquake Hits Delhi and Suberban Areas
1 min read

நிலநடுக்கம் பதிவு :

Delhi Earthquake Today : இதுபற்றி தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ” ஹரியானாவின் ரோஹ்தக் பகுதியை மையமாக கொண்டு காலை 9:04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.4. என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது.

தலைநகர் டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நொய்டா, காஜியாபாத், குருகிராம் உள்ளிட்ட இடங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

15 வினாடிகள் நீடித்த நிலநடுக்கம் :

15 வினாடிகள் வரை நீடித்த நிலநடுக்கத்தால், வீடுகளில் இருந்த பொருட்கள் லேசாக ஆடுவதை கண்ட பொதுமக்கள், அதிர்ச்சி அடைந்து சாலைகளுக்கு வந்தனர். அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் நிலநடுக்கத்தை நன்றாகவே உணர முடிந்ததாக பொதுமக்கள் கூறினார்.

மேலும் படிக்க : அரைவட்ட வடிவில் மாணவர் இருக்கை : மாற்றத்தை ஏற்படுத்திய கேரள படம்

சேதம் ஏதும் ஏற்படவில்லை :

உத்தர பிரதேசத்தின் மேற்கு பகுதி, ஹரியானாவில் ஒருசில இடங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், உயிர்ச்சேதமோ, பொருட் சேதமோ ஏற்படவில்லை. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம்(Earthquake) ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பூமிக்கு அடியில் உள்ள தட்டுகள் நகர்வு :

நிலநடுக்க பாதிப்பு ஏற்படும் பகுதியில் டெல்லி இல்லாவிட்டாலும், பூமிக்கு அடியில் இருக்கும் அடுக்குகள் நகர்ந்ததால், நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க : வட்டி விகித மாற்றங்களில் இந்திய வங்கிகள் : பிசிஜி ஆய்வு வெளியீடு

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in